நாடகத்தில் நடிக்கும் போதே சொன்ன வாக்கைக் காப்பாற்றிய எம்.ஜி.ஆர்., இப்படி ஒரு மனசா?

By John A

Published:

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் பற்றி எழுத வேண்டும் என்றால் பல பாகங்களாக எழுதிக் கொண்டே போகலாம். இலங்கையில் பிறந்ததில் இருந்து சென்னையில் மறைந்தது வரை அவருடைய நாடகம், சினிமா, அரசில், கொடைத்தன்மை போன்றவற்றைப் பற்றி சொல்லி மாளாது. மூன்று வேளை சாப்பாட்டிற்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தவர் பின்பு தமிழ்நாட்டையே ஆண்டு மக்கள் மனதில் இதய தெய்வமாகக் குடியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் தான் சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை பல வகைகளில் தான தர்மங்கள் வழங்கியும், அள்ளிக் கொடுத்தும் கலியுகக் கர்ணணாகத் திகழ்ந்தவர். ஆனால் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே மக்களிடத்தில் அப்படியொரு நம்பிக்கையைப்  பெற்றிருக்கிறார் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம்.

அரசியலில் வருவதற்கு முன் நடிகராக இருந்து போது படத்தில் மட்டும் இல்லாமல் நாடகத்திலும் நடித்து வந்தார் எம்.ஜி.ஆர் நடிப்பில் இன்பக்கன்னி என்ற நாடகம் உருவாகிக் கொண்டிருந்தது. அப்போது அதை சீர்காழியில் அரங்கேற்றம் செய்யப் போகம் போது நாடகத்தின் ஒரு காட்சியில் இரும்பு உருளையை தூக்கி போடும் காட்சிக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராவிதமாக அது தவறி எம்.ஜி.ஆர் காலில் விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டு விட்டது.

6 மாதமாக சர்ச்சையில் சிக்கிய கமல் பாடல்… முற்றுப்புள்ளி வைத்து முடித்த வைரமுத்து.. அந்தப் பாட்டு இதானா?

நாடகம் எப்பொழுது ஆரம்பிக்கப் போகிறார்கள் என்று ஆவலுடன் டிக்கெட் வாங்கிக் கொண்டு அரங்கில் அமர்ந்திருந்னர் ரசிகர்கள். திடீரென திரை விலகியது அந்த சமயம் அந்த சமயத்தில் எம்.ஜிஆர். தடுமாறி நடந்து கொண்டே மேடைக்கு வந்து ரசிகர்களிடம் ,”நண்பர்களே,தாய்மார்களே எதிர்பாராத விதமாக ஒரு விபத்து நடந்து என் காலில் முறிவு ஏற்பட்டு விட்டது, யாருக்கும் கவலை வேண்டாம்.. ஒன்னும் பெருசா இல்லை, என்னால் இப்போது இந்த நாடகத்தில் நடிக்க முடியாது. ஆனால் கண்டிப்பாக குணம் பெற்று வந்து நான் மீண்டும் நடிப்பேன்.

இன்று இந்த இன்ப கன்னி நாடகத்திற்காக நீங்கள் வாங்கிய டிக்கெட்டை பத்திரமாக வைத்து கொள்ளுங்கள். மறுமுறையும் டிக்கெட் வாங்க தேவை இல்லை” என்று சொல்லி சென்னை திரும்பி விட்டார். பிறகு கால் குணமானதும் மீண்டும் சீர்காழி சென்று சென்று அந்த நாடகத்தில் வெற்றிகரமாக நடித்துக் கொடுத்தார்.மேலும் நாடக சபாவிற்கான வாடகையையும் தன் சொந்த பணத்தில் கொடுத்தார், மறுமுறை வந்தர்வர்களிடம் டிக்கெட்டிற்கு பணம் பெற வில்லை. இவ்வாறு தன் ரசிகனை திருப்திப் படுத்த வேண்டும் என எண்ணியும், மக்களின் பணத்தில்தான் நாம் வாழ்கிறோம் என்று எண்ணியும் தங்களது உடல் நலத்தையும் பாராது அயராது உழைத்து பின்னர் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அவதரித்தார் எம்.ஜி.ஆர்.