சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில் சென்னையில் இந்த படத்தை பல திரையுலக பிரமுகர்கள் முதல் நாள் முதல் காட்சி பார்த்து ரசித்தனர்
லதா ரஜினிகாந்த், ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த், லாரன்ஸ், சிவகார்த்திகேயன் உள்பட பல திரையுலக பிரபலங்கள் இன்று முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்தனர்
இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் அடுத்த திரைப்படமான ’தலைவர் 168’ படத்தின் நாயகிகளான மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் இந்த படத்தை இணைந்து பார்த்து ரசித்தனர். மீனாவுடன் அவரது மகள் நைனிகா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தறி’ படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த நைனிகா தற்போது பெரிய பெண்ணாக ஆகி உள்ளார் என்றும் விரைவில் அவர் நாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது