பிரபல பாலிவுட் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ மற்றும் ’ஹீரோ’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தொடர் வெற்றி பெற்றதையடுத்து தற்போது அவர் ரவிக்குமார் இயக்கி வரும் விஞ்ஞானப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ’இன்று நேற்று நாளை’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஷரத் கெல் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே விவேக் ஓபராய், அக்ஷய்குமார், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராப் உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் தமிழ் திரைப்படங்களில் வில்லன்களாக நடித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒருவர் தமிழ் படமொன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடித்து வருகிறார்