சினிமாவில் மார்க்கெட் தான் ஒரு நட்சத்திரத்தை உயரத்தில் தூக்கியோ, கீழே இறக்கியோ காட்டுகிறது. அந்த வகையில் நடிகை மீனாவும் விதிவிலக்கல்ல.
தமிழ்சினிமாவில் வசூல் மன்னர்களில் ஒருவர் அஜீத். ஆரம்பத்தில் சினிமாவில் பல அவமானங்களை சந்தித்தவர். அவர் அறிமுகமான படம் அமராவதியாக இருந்தாலும் வசந்த் இயக்கத்தில் வெளியான ஆசை படம் தான் அவரைத் தூக்கிவிட்டது. அப்போது தான் வெளியே தெரிய ஆரம்பித்தார். அதன்பிறகு சினிமாவில் தேர்ந்தெடுத்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி இருந்தும் அவர் வளர சில ஆண்டுகள் ஆனது.
இதையும் படிங்க… இரண்டு நாய்கள் மட்டுமே நடித்து வெளியாக இருக்கும் ‘கிளவர்’ திரைப்படம்… அட… இது புதுசா இருக்கே…
ஆசை தான் அவருக்கு முதல் சூப்பர்ஹிட் படம். அதற்கு முன்பு வரை பைக் ரேஸில் தான் கவனம் செலுத்துவாராம். அதற்காகவே படங்களில் நடித்து வந்தாராம். ஆசை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர் சினிமாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். கதைகளைத் தான் நம்பினார். அதற்காக சில படங்களில் செகண்ட் ஹீரோவாகக் கூட நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது மீனா முன்னணி நடிகையாக இருந்தார். ரஜினியுடன் எஜமான், முத்து, வீரா ஆகிய படங்களில் ஜோடியாக நடித்துக் கொண்டே இருந்தார். அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
அப்போது சினிமா சம்பந்தமாக கலைவிழா ஒன்று நடந்ததாம். விழா ஏற்பாட்டாளர்களோ அஜீத்துடன் இணைந்து மீனா நடனமாட ஏற்பாடு செய்து இருந்தார்களாம். ஆனால் மீனாவின் அம்மாவோ என் பொண்ணு ரஜினிக்கு ஜோடியா நடிச்சிக்கிட்டு இருக்கா. அவளைப் போயி அஜீத்துக்கூட ஆட சொல்றீங்க என கோபப்பட்டாராம். உடனே அந்த நடனத்தைக் கேன்சல் செய்து விட்டார்களாம்.

அதன்பிறகு சில ஆண்டுகளில் மீனாவின் மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதே நேரம் அஜீத்தின் மார்க்கெட் வளர ஆரம்பித்தது. அப்போது வந்த படம் தான் ஆனந்த பூங்காற்றே. இந்தப் படத்தில் மீனா தான் ஜோடி என்றதும் அஜீத் எதுவுமே சொல்லாமல் அவருடன் இணைந்து நடித்தாராம்.
மற்ற நடிகர்களாக இருந்தால் பழைய சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு இந்த நேரங்களில் பழி வாங்குவார்கள். ஆனால் தல அப்படி செய்யவில்லை. இதுவே அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. தல என்னைக்குமே தல தான். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே, சங்கு சுட்டாலும் வெண்மை தரும்னு நம் முன்னோர்கள் சும்மாவா சொன்னாங்க…
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


