மீனாவுக்கு ரத்தக்காயம்.. பதறிய முத்து..! நான் ரோகிணி மாமா இல்லை.. பிரவுன்மணி ஒப்புதல்.!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில், இன்றைய எபிசோடில் முத்து தான் குடிக்கவில்லை என்பதை மீனா மற்றும் ரவி ஆகிய இருவருக்கும் புரியவைக்கிறார். அதன் பிறகு, “தன் மீது பழி போட்டு…

sa5 1
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “சிறகடிக்க ஆசை” சீரியலில், இன்றைய எபிசோடில் முத்து தான் குடிக்கவில்லை என்பதை மீனா மற்றும் ரவி ஆகிய இருவருக்கும் புரியவைக்கிறார். அதன் பிறகு, “தன் மீது பழி போட்டு விட்டாயே!” என்று மீனாவிடம் கூற, மீனாவும் மன்னிப்பு கேட்கிறார்.இதற்கெல்லாம் காரணம் மனோஜ் தான் என்பதை அறிந்த பின்னர், மனோஜிடம் சென்று அவரிடம் வம்பு இழுக்கிறார். அதன் பின், அவருடைய மொபைலை வாங்கிக்கொண்டு ஓட, மனோஜ் பின்னாலே விரட்ட, ரோகிணி மற்றும் மீனாவும் அவரைத் தொடர்ந்து செல்கிறார்கள். இறுதியில், ஒரு வழியாக மீனா மொபைலை மீட்டுக் கொண்டு, அதை ரோகிணியிடம் கொடுக்கிறார்.

இந்த நிலையில், கல்யாணத்திற்கு ஒரு ஜோடி வருகின்றனர். அவர்கள் நகை திருடும் கும்பல் என்ற நிலையில் “எப்படியாவது நகையை திருடிவிட்டு தப்பிக்க வேண்டும்” என்று திட்டமிடுகின்றனர். அப்போது, மீனாவிடம் பரசு “பொண்ணை அழைத்து வா” என்று கூற, மீனாவும் மணமகள் அறைக்கு செல்கிறாள்.

அங்கே, பின்னால் வந்த அந்த நகை திருடும் பெண், மீனாவிடம் பேச்சு கொடுத்து, “நீங்கள் எல்லோரும் போங்க, நான் கதவை பூட்டிவிட்டு வருகிறேன்” என்று கூறி அனுப்புகிறார். அப்போது அந்த பெண் இடுப்பிலிருந்து கத்திரிக்கோல் கீழே விஅழ அதை பார்த்ததும் சந்தேகம் அடைந்த மீனா, “எதற்காக கத்தரிக்கோல்?” என்று கேட்கிறார்.

அதற்கு, அந்த பெண் சமாளித்து “நான் மாப்பிள்ளையின் அக்கா” என்று சொல்ல, மீனாவும் “சரி, பரவாயில்லை” என்று செல்கிறார். ஆனாலும், அந்த பெண் மீது மீனாவுக்கு சந்தேகம் இருக்கிறது. இதை அவர் முத்துவிடம் சொல்கிறார். முத்துவும் “சரி, பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறுகிறார்.

இந்த நிலையில், திருமணம் நல்லபடியாக முடிகிறது. ஆனால், திருமணம் முடிந்தவுடன் அந்த நகை திருடும் பெண், நகையை திருடிவிட்டு ஓட முயல்கிறார். முத்து, மீனா இருவரும் அவர்களை வழிமறித்து பிடிக்கின்றனர். அவர்கள் தப்பிக்க முயற்சிக்க, வேறு வழியில்லாமல் பேக்கை விட்டு, தப்பி ஓடிவிடுகின்றனர்.அந்த நேரத்தில், மீனாவிற்கு காயம் ஏற்படுகிறது. காயமடைந்த மீனாவைப் பார்த்து பதறும் முத்து, “ஆஸ்பத்திரிக்கு போகலாம்” என்று கூற, “அதெல்லாம் வேண்டாம், சின்ன காயம் தான், சரியாகிவிடும்” என்று மீனா மறுக்கிறார். பரசுவும் “ஆஸ்பத்திரிக்கு போயிட்டு ரெஸ்ட் எடுங்கள்” என்று அவர்களை அனுப்பி வைக்கிறார்.

அதன்பின், பிரவுன் மணியுடன் செல்லும் பரசு, “என்னுடைய மகளின் நகையை ஒருத்தர் திருட வந்தார். என்னுடைய நண்பரின் மகனும் மருமகளும் தான் காப்பாற்றினார்கள் என்று சொல்ல, அவர்களுக்கு நான் மாலை மரியாதை செய்ய வேண்டும். எங்கே இருக்கிறார்கள்?” என்று பிரவுமணி கேட்கிறார்.

முத்துவையும் மீனாவையும் பார்க்க பிரவுன் மணி வரும் காட்சியுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

நாளைய எபிசோடில்: அண்ணாமலை குடும்பத்தாரிடம் பிரவுன் மணி, “தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள், நான் ரோகிணியின் மாமா இல்லை!” என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து, விஜயா ஆத்திரமாகி, “ரோகிணியை அடித்து வீட்டை விட்டு துரத்தும்” காட்சிகள் இருக்கின்றன.

ஆனால், இது உண்மையிலேயே நடந்ததா? அல்லது கனவா? என்பதை அடுத்த வாரம் தான் பார்க்க முடியும்!