மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் என்ற பாடல் மிக பிரபலமானது. அருண் ராஜா காமராஜ் வரிகளில் வரிகளே புரியாவிட்டாலும் இளசுகள், சிறுசுகள் பெருசுகள் என அனைவரையும் துள்ளலாட்டம் போட வைக்கும் இந்த பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்த பாடல் வந்த நேரத்தில் இருந்து இப்படத்தில் நடிக்கும் நடிகர் சாந்தனு உட்பட பலரும் இப்பாடலுக்கு டான்ஸ் ஆடி விட்டனர்.
அந்த வகையில் இன்று மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டியது கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் இன்று அந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகவில்லை. இருந்தாலும் அவரது ரசிகர்கள் இந்த பாடலை பலவிதத்தில் ஆடி வருகின்றனர்.
டிவி தொகுப்பாளரான புவனா பாலகிருஷ்ணன் இப்பாடலுக்கு பரதம் ஆடியதை தன் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.