நேற்று கொரோனா குறித்து பேசிய குறித்து பேசிய பிரதமர் மோடி அவர்கள் வரும் 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்
இதனை அடுத்து வரும் 22ஆம் தேதி அனைத்து கடைகளும் மூடப்படும் என வணிகர்கள் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்
அதேபோல் 22ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து உணவகங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோர்களின் பணியைப் பாராட்டும் வகையில் பிரதமர் மோடி கூறியபடி 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு அவர்களுக்கு கைதட்டி ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் வணிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்
மேலும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு பின் பால் விநியோகமும் நடைபெறாது என்று பால் வினியோகம் பால் முகவர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது