வசனங்களை எழுதாம ஸ்பாட்ல சொல்ற குருநாதர்.. பெரிய ஹிட் கொடுத்தும் 3 நாள் பட்டினியா கிடந்த சிஷ்யர்…!

தமிழ்த்திரை உலகம் பல விசித்திரங்கள் நிறைந்தது. வசனங்களை எழுதுவதற்கு என்று ஒரு வசனகர்த்தா இருப்பார். அவர் ஏற்கனவே தயார் செய்த வசனங்களைத் தான் நடிகர்கள் பேசுவாங்க. ஆனால், வசனங்களையே எழுதாமல் சூட்டிங் ஸ்பாட்லயே வைத்து…

Vikraman, Manivannan

தமிழ்த்திரை உலகம் பல விசித்திரங்கள் நிறைந்தது. வசனங்களை எழுதுவதற்கு என்று ஒரு வசனகர்த்தா இருப்பார். அவர் ஏற்கனவே தயார் செய்த வசனங்களைத் தான் நடிகர்கள் பேசுவாங்க. ஆனால், வசனங்களையே எழுதாமல் சூட்டிங் ஸ்பாட்லயே வைத்து சொல்லி யார் யாரைப் பேசச் சொல்ல வேண்டுமோ அவர்களையே பேச வைப்பார் இந்த இயக்குனர்.

அதே போல இன்னொரு பெரிய இயக்குனர் இருந்தார். அவர் பெரிய ஹிட்டைக் கொடுத்தும் 3 நாள்கள் பட்டினியாகக் கிடந்துள்ளார். இந்த இருவரையும் பற்றி இங்கு பார்ப்போம்.

முதலில் இயக்குனர் விக்ரமன் டைரக்டர் மணிவண்ணனுடன் பணிபுரிந்ததைப் பற்றியும் அவர் என்ன சொல்கிறார் என்றும் பாருங்கள்.

மணிவண்ணன் ஒரு சிகரெட் பிடிப்பாரு. வசனங்களை டக் டக்னு சொல்வாரு. சீனை ஆர்டர் படியும் எடுக்க மாட்டாரு. ஏதோ ஒரு ஷாட்ல இருந்து எடுப்பாரு. அதை நாம ஃபாலோ பண்ணலாம் முடியாது. அவரே சீனை எடுத்து எடிட் பண்ணி ஆர்டர் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் தான் ஓஹோ இதைத்தான் அவரு யோசிச்சிருக்காருன்னு தோணும்.

கதையே ஒன்லைன்ல தான் இருக்கும். டீட்டெய்லடு ஸ்கிரிப்டா இருக்காது. அதுவும் கதையை அவர் சொல்லும்போது ஆஃபாயில்டு தனமாகத் தான் இருக்கும். ஸ்பாட்ல வச்சி அவரு சீன்ஸ், டயலாக் யோசிப்பாரு. கதையோட ஷேப்பையே மாத்துவாரு. அவரு கூட யாரையுமே ஒப்பிட முடியாது.

Puthu vasantham
Puthu vasantham

நானும் எத்தனையோ டைரக்டர்கிட்ட ஒர்க் பண்ணிருக்கேன். அவரை மாதிரி யாரையும் பார்த்தது கிடையாது. தலைசிறந்த ஆளுமை உள்ளவர். நல்ல இயல்பா பெர்பார்ம் பண்ணிக் காட்டுவாரு. நடிகர்கள்கிட்ட நடிப்பு வாங்குவதிலும் வல்லவர்.

அவருக்கிட்ட இருந்து கத்துக்கிடவே முடியாது. அவரோட குணாதிசயம் என்ன இருக்குன்னு எனக்கே தெரியல. அத்தனை திறமையையும் உள்ளடக்கிய பல்கலை வேந்தன்னு தான் சொல்லணும். அவரு கூட ரெண்டு படம் தான் பண்ணியிருக்கேன். நூறாவது நாள், குவா குவா வாத்து.

நூறாவது நாள் டிஸ்கஸ்ல நாங்க ரெண்டே ரெண்டு பேரு தான் இருந்தோம். அப்போ எனக்கு ஊருல கொஞ்சம் வேலை இருந்தது. மணிவண்ணன் ஒரு அசிஸ்டண்ட்ட அடிச்சிட்டதால மற்ற அசிஸ்டண்ட்லாம் ஸ்ட்ரைக் பண்ணாங்க. நான் அந்த டைம்ல ஊருக்கு போனதனால நானும் அந்தக் கூட்டத்துல ஒருவன்னு நினைச்சி என்னையும் அவரு திரும்பி வரும்போது சேர்க்கல.

புதுவசந்தம் என்ற பெரிய ஹிட் படம் கொடுத்து, அடுத்து பெரும்புள்ளி என ஒரு பிளாப் கொடுத்தேன். பிளாட், கார் எல்லாம் வாங்கிட்டேன். அடுத்து நான் பேச நினைப்பதெல்லாம் படத்தை எடுக்கும்போது 3 நாள் பட்டினி கிடந்தேன். 1 ஹிட், 1 பிளாப் கொடுத்தும் நான் சாப்பாட்டுக்கு வழியில்லாம பட்டினியா கிடந்தேன். எல்லாத்தையும் அடகு வச்சாச்சு, கார், வீடுன்னு. அப்படி வச்சும் கூட கஷ்டப்பட்டேன் என்கிறார் இயக்குனர் விக்ரமன்.