தமிழ்நாட்டைச் சார்ந்த மஞ்சு வாரியார், பெரிய அளவில் பிரபலமானது என்னவோ மலையாள சினிமாவில்தான். 1995 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் எண்ட்ரி கொடுத்த அவர், தற்போது 25 ஆண்டுகளைத் தாண்டி சினிமாவில் நிலைத்து நடித்து வருகின்றார்.
சினிமாவில் பெரிய அளவில் ஜொலித்த காலகட்டத்திலேயே இவர் மலையாள நடிகர் திலீப்பை 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்த இவர், அவரை 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
அதன்பின்னர் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார், தமிழில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் மனதினையும் கொள்ளை கொண்டுவிட்டார்.
கொரோனா ஊரடங்கால் ஓய்வில் இருந்துவரும் மஞ்சு வாரியார் அவ்வப்போது புகைப்படங்கள், வீடியோக்களைப் போட்டு வைரலாக்கி வந்தார்.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள கயட்டம் படத்தின் ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆளே அடையாளம் தெரியாத அளவு ஒரு கெட்டப்பில் மஞ்சு வாரியார் அந்த போஸ்டரில் உள்ளார். அசுரன் படத்துல வருவாங்களே அந்த மஞ்சுவாரியாரா இவங்க? என ரசிகர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே போய் விட்டனர். இருப்பினும் இவரது வித்தியாசமான முயற்சிக்கு தொடர்ந்து பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.