நடிகர் சூர்யாவுக்கு ஏற்பட்ட காயம்… சோகத்தில் ரசிகர்கள்!!

By Staff

Published:

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த என்.ஜி.கே, காப்பான் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது இவர் நடிப்பில் உருவாகிவரும் சூரரைப்போற்று ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பினை சந்தித்து வருகின்றது.

சூரரைப் போற்று படத்தினை முடித்த கையோடு சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. வாடிவாசலுக்குப் பின்னர் சிறுத்தை சிவா இயக்கத்திலும், ஹரி இயக்கத்திலும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே வெளியாகிவிட்டன.

4ed4c249f672273ae5587900258b4505

வாடிவாசல் படப்பிடிப்பானது ஜூன் 2 வது வாரம் துவங்கலாம் என்று கூறப்பட்டு வருகிற நிலையில், தற்போது சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வதந்தி என நம்பப்பட்ட நிலையில், சூர்யா அலுவலகத்தில் இருந்து இந்தத் தகவல் உறுதியாகியுள்ளது.

சினிமாவைத் தாண்டி, யாருக்கு இல்லையென்றாலும் ஓடோடி உதவி செய்பவர் நடிகர் சூர்யா, பொதுப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் முதல் ஆளாக பொதுமக்களுக்கு ஆதரவாக இருப்பவரும் அவரே ஆவார். சமீபத்தில் பெப்சி தொழிலாளர்களுக்கு பணம் வசூலித்தபோது பலரும் உதவிகளை வழங்கத் தயங்கிய நிலையில் சூர்யா முதல் ஆளாய் நிதியுதவி வழங்கினார்.

இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்களும் இதுகுறித்து சூர்யாவுக்கு கால் அழைப்பினை மேற்கொண்டு பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment