மலையாளத் திரையுலகுக்கு இது ராசியில்லாத காலம் தான் போல. தொடர்ந்து நடிகைகள் உயிரிழந்து வருவது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த மாதம் நடிகை அபர்ணா நாயர் தற்கொலை, சில நாட்களுக்கு முன் ரெஞ்சுஷா மேனன் தற்கொலை என நடிகைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள தற்போது மலையாள சின்னத்திரை நடிகை பிரியாவும் மாரடைப்பால் உயிரிழந்த சோகம் மல்லுவுட்டை கதிகலங்க வைத்திருக்கிறது.
சின்னத்திரை நடிகை பிரியா
மலையாளத் திரையுலகில் சின்னத்திரையில் நடித்து வந்தவர் பிரியா. இவர் ஒரு டாக்டரும் கூட. 35 வயதே ஆன டாக்டர் பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று வழக்கமான பரிசோதனைகளுக்குப் பிறகு வீட்டிற்குச் சென்ற அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வேறுஏதும் உடல் நலப்பிரச்சினைகள் இல்லை எனவும் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
பிறந்த நாளில் விபரீத முடிவை எடுத்த முன்னணி நடிகை : அதிர்ச்சியில் திரையுலகம்
மலையாள சினிமாவில் ‘கருத்தமுத்து‘ என்ற திரைப்படம் மூலம் பிரியா புகழ் பெற்றார். கர்ப்பமாக இருக்கும் போது பிரியா உயிரிழந்ததால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்து தீவிர மருத்துவ சிகிச்சை கொடுத்து வருகின்றனர். தாயின் முகத்தைக் கூட காண இயலா நிலையில் அந்தப் பிஞ்சுக் குழந்தையின் நிலை கண்டு மலையாளத் திரையுலகம் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் இது போன்ற இளம் வயதினருக்கு உடனடியாக கார்டியாக் அரஸ்ட் என்னும் நெஞ்சுவலியால் உயிரிழப்பது அதிகமாகி வரும்வேளையில் மருத்துவர்கள் இதுகுறித்து விழிப்புணர்வு பதிவை வெளியிட்டு வருகின்றனர்.
மாரடைப்பு எந்த வயதிலும் தாக்கலாம் என்பதால் முறையான உணவு, உடற்பயிற்சி, தீய பழக்கங்களில் இருந்து விடுபடுதல் போன்றவற்றைச் செய்தாலே இதுபோன்ற கார்டியாக் அரஸ்ட்-ஆல் உயிரிழப்பைத் தடுக்கலாம் என அறிவுரை வழங்கி வருகின்றனர். இதுபோன்று கடந்த சில வருடங்களுக்கு முன் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் இது போன்று உடற்பயிற்சி செய்யும் போது மாரடைப்பால் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.
தொடர்ந்து நடிகர், நடிகைகள் இளம் வயதிலேயே மாரடைப்பால் உயிரிழக்கும் செய்தி சினிமா வட்டாரங்களில் ஆரோக்கியம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது. பலரும் தங்கள் உடல் நலன் காக்கும் விழிப்புணர்வில் இறங்கி விட்டனர்.