கடந்த ஒரு மாதமாக சினிமா ரசிகர்கள் மத்தியிலும், தென்னிந்திய சினிமா துறையிலும் அடித்த மஞ்சும்மல் பாய்ஸ் அலை தற்போது அடித்து ஓய்ந்திருக்கிறது. மலையாள சினிமா உலகில் இதுவரை எந்த படமும் வசூலிக்காத வசூல் சாதனையை 200 கோடிக்கும் மேல் வசூலித்து மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை படைத்தது பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டது.
இத்தனை மகத்தான வெற்றிக்குக் காரணம் குணா குகை என நாம் அனைவரும் அறிந்ததே. எந்த குணா படத்தினை அன்று கொண்டாடாமல் இன்று தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறோமோ அந்த குணா படத்தின் கதையை எழுதியதும் ஒரு மலையாளியே. மஞ்சும்மல் பாய்ஸ் வெற்றிக்கு எப்படி தமிழில் ஒரு குணா தேவைப்பட்டதோ, அதே போல் அப்போது குணாவின் வெற்றிக்கு தேவைப்பட்டது கமல்ஹாசனும், சாப்ஜோன் என்ற மலையாள திரைக்கதை ஆசிரியரும்.
ஏன் தல தலன்னு சுத்துறாங்க தெரியுமா..? அஜீத் பற்றி ரங்கராஜ் பாண்டே உடைத்த ரகசியம்
தமிழில் எப்படி பஞ்சு அருணாச்சலம், கொத்தமங்கலம் சுப்பு போன்ற திரைக்கதை ஜாம்பவான்கள் இருந்தார்களோ அதே போல் மலையாளத்திலும் திரைக்கதை மன்னனாக திகழ்ந்தவர் தான் சாப்ஜோன். மலையாளத்தில் கமல்ஹாசன், ஜெயராம், ஊர்மிளா போன்றோர் நடித்த சாணக்கியன் படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானவர் முதல் படத்திலேயே தனது பரபரப்பு திரைக்கதை மூலம் மலையாள சினிமா உலகையே கவனிக்க வைத்தார். பின்னர் கமலுடன் நட்பு கிடைக்க, பின்னர் இயக்குனர் சிபி மலயில், மூவரும் சேர்ந்து இலங்கை அரசியல் குறித்த ஒரு படம் எடுக்கலாம் என்று நினைத்து இலங்கை அரசியல் பற்றி நன்கு அறிந்த சோ ராமசாமியிடம் ஆலோசனை கேட்க அவர் வேண்டாம் என ஆலோசனை கூறியிருக்கிறார்.
இதன் பின்னரே குணா உருவாகியிருக்கிறது. தன் ஊரில் தான் பார்த்து வளர்ந்த ஒருவரின் கதையை வைத்து குணாவை உருவாக்கினார் சாப்ஜோன். அதன் பின்னர் கதை விவாதம் தொடங்க அதில் கமலின் தலையீடு அதிகம் இருக்கவே அதில் தனக்கு வேலையில்லை என்று அதிலிருந்து கழண்டு கொண்டார் சிபி மலயில்.
குர் ஆனுக்கு இவர் உரை எழுதுவதா? கண்ணதாசனுக்கு எழுந்த சிக்கல்.. அல்லாஹ் அருளால் எழுதிய ஹிட் பாடல்
இதே கதையை மம்முட்டியிடம் சொல்லி ‘சூர்ய மானஸம்’ என்ற பெயரில் சற்று மாற்றி எடுக்க படம் தோல்வி கண்டது. ஏனெனில் இதில் கதை பேசப்பட்ட அளவிற்கு மம்மூட்டியின் தோற்றம் எடுபடாமல் போனதால் படம் தோல்வியை தழுவியது. அதன் பின்’சாப் ஜோன் ‘வியூகம்’ என்ற படத்தில் இவருடைய திறமை மீண்டும் வெளிவந்தது. ரகுவரன் நடித்த இந்த படம் திரில்லர் காட்சிகளுக்காக பேசப்பட்டது. மேலும் காந்தாரி, பரணகூடம் போன்ற மலையாளப்படங்களில் சாப் ஜோனின் உழைப்பு பேசப்பட்டது. அதன்பின் சாப்ஜோனை யாரும் அழைக்கவில்லை. பின்னர் வருமானதிற்கு வழியின்றி இருந்தவருக்கு வந்த வாய்ப்பு தான் ‘சில்லனு ஒரு காதல்’. இந்தக் கதையை அப்பட இயக்குனர் கிருஷ்ணாவிடம் சொல்ல அவர் அதை சூப்பர்ஹிட் படமாக மாற்றினார். ஆனால் இந்தக் கதை சான்ஜோன் கதை என்பது யாரும் அறியவில்லை.
அதன் பின் சில முயச்சிகளுக்குப் பிறகு Screewrite.in என்ற இணைய தளத்தினைத் தொண்டங்கி திரைக்கதை பற்றிய பாடம் எடுக்க இன்று உலகின் பல மொழிகளிருந்தும் இன்று இவரிடம் சினிமா பாடம் படித்துக் கொண்டிருக்கின்றனர் மாணவர்கள்.