குர் ஆனுக்கு இவர் உரை எழுதுவதா? கண்ணதாசனுக்கு எழுந்த சிக்கல்.. அல்லாஹ் அருளால் எழுதிய ஹிட் பாடல்

கவிஞர் கண்ணதாசன் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி பல நூல்களையும் எழுதியிருக்கிறார். பகவத் கீதையை முழுவதுமாக புரிந்து கொண்டு அதில் கூறப்பட்டிருக்கும் கருத்துக்களை உள்வாங்கி இந்து மதத்தை பின்பற்றுவோருக்கு ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்னும் ஒப்பற்ற கவியத்தைக் கொடுத்தார். இந்நூலில் இந்து என்பவன் யார்? கடைபிடிக்கும் பழக்கவழக்கங்கள், சமய சடங்கு முறை, வழிபாட்டு முறை போன்றவை குறித்து தெளிவாக எடுத்துரைத்திருப்பார் கண்ணதாசன்.

இதேபோல் ‘இயேசு காவியம்’ என்னும் கவிதை நூலையும் இயற்றி அதில் கருணைக்கு கடவுள் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை இயற்றியிருப்பார் கண்ணதாசன். இப்படி இரு மதங்களுக்கும் அற்புதமான ஒரு படைப்பைக் கொடுத்தவருக்கு சிந்தையில் உதித்த ஓர் எண்ணம்தான் நபிகள் நாயகம் அருளிய திருக்குர் ஆன் -க்கு கவிதை நடையில் உரை எழுதுவது.
குர் ஆனை கையில் எடுத்தார் கண்ணதாசன் அதனை படிக்க படிக்க இவருக்கு பேரானந்தம். மானுட வாழ்வுக்கு ஒப்பற்ற கருத்துக்களின் களஞ்சியமாக இருந்தது. குர் ஆனின் மகத்துவத்தில் தன்னையே மறந்தவர் அதை படித்து விட்டு கவிதை நடையில் உரை எழுதலாம் என் எண்ணி உரை எழுத ஆரம்பித்தார்.

ஆனாலும் குர்ஆனின் முதல் அத்தியாயமான ‘அல்ஃபாத்திஹா’வுக்கு, கவிதை உரை எழுத,  ‘ஆரம்பிக்க ‘கூடாது’ என எதிர்ப்பு. ஏனெனில் மதுவுக்கு அடிமையாகியிருந்த ஒருவர் மதுவே கூடாது என்று சொல்லப்பட்டிருக்கும் அந்த புனித நூலுக்கு உரை எழுதுவதா என சில இஸ்லாம் இயக்கங்கள் போர்க்கொடி தூக்க, தனது பேனாவை கீழே வைத்தார்.

பாலு மஹேந்திரா கடைசியாக வாங்கிய சத்தியம்.. மனம் திறந்த நடிகை மௌனிகா

குர் ஆனில் வரும் வரிகளான ‘அவனது நாட்டம் இன்றி எதுவும் நடைபெறாது’ என்பதை உணர்ந்து அந்த முயற்சியைக் கைவிட்டார்.

”எல்லையில்லா அருளாளன்
இணையில்லா அன்புடையோன்
அல்லாஹ்வைத் துணைகொண்டு
ஆரம்பம் செய்கிறேன்..” என்று ஆரம்பித்தவர் அதோடு நிறுத்திக் கொண்டார்.

இவர் உரை எழுதியதை நிறுத்தி விட்டாலும் தனக்குள் இருந்த அந்த தாகத்தை ‘பாவ மன்னிப்பு’ படத்தின் வாயிலாக தீர்த்துக் கொண்டு இஸ்லாமிய மக்களின் மனதில் நெருக்கமாகி விட்டார். ”எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி…” என்று காலத்தால் அழிக்க முடியாத காவிய பாடலைக் கொடுத்து ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்பதை நிரூபித்து விட்டார் கவியரசர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...