காதல் பாடலில் கவிஞரின் குசும்பைப் பாருங்க… அவரு என்ன செய்வார்? சிச்சுவேஷன் அப்படி இருக்கே..?!

By Sankar Velu

Published:

2003ல் கரு.பழனியப்பன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சினேகா உள்பட பலர் நடித்த படம் பார்த்திபன் கனவு. வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்துல கவிஞர் அறிவுமதி ஒரு குசும்பான பாடலை எழுதியிருப்பார். ‘வாடி மச்சினியே…’ என்று ஒரு பாடல். அடித்தட்டு மக்களின் இலக்கியத்தை கொஞ்சமும் ரசனை குறையாமல் எழுதியுள்ளார்.

காதலன் ‘ராத்திரி வர்றீயா..’ன்னு கேட்கிறான். ‘வந்துடலாம். ஆனால் சிக்கல் இருக்கு..’ன்னு சொல்கிறாள் காதலி. அப்படின்னா இந்த மாதிரி வர்றீயான்னு கேட்கிறார். அப்பவும் என்ன சிக்கல் என்று சொல்கிறாள். இருவருக்குமே ஆசை இருக்கும். ஆனால் அவள் அவனது ஆசைகளுக்கு எல்லாம் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டே இருப்பாள். இது குறவன் குறத்தி ஆட்டம், கரகாட்டம் போன்ற நாட்டுப்புறக்கலைகளில் பார்க்கலாம்.

வித்யாசாகர் இந்தப் பாடலைக் கன்னி வடிவில் பண்ணியிருப்பார். நய்யாண்டி, சப்தக்கருவியைப் பயன்படுத்தி இருப்பார். ‘வாடி மச்சினியே… ஒரசிட தேடி மச்சினியே குனிஞ்சா நிமிந்தா மனம் தீ புடிக்குது தீ புடிக்குது அணைச்சி கொள்ளடியோ… என காதலன் பாட, சீனி சக்கரையே சிரிப்புல சேதி வைக்கறீயே… அசந்த அசந்த மனம் பூத்திருக்குது பூத்திருக்குது பறிச்சு கொள்ளுவியே…’ என்று பாடல் ஆரம்பிக்கிறது.

Vadi machiniya
Vadi machiniya

‘முத்து முத்தா பெஞ்ச மழை தன்னானன்னானே… அங்கு மூங்கிலுல தொங்குதடி தன்னேனன்னானே…’ என காதலன் பாடுவான். அதற்குப் பெண் ‘முத்து மழை எடுத்துத் தாடா தன்னானன்னானே… நான் மூக்குத்தியாப் போட்டுக்குவேன் தன்னானன்னானே…’ என பாடுவாள்.

‘வெள்ளி வரும் நேரத்துல தன்னானன்னானே… நீ வேட்டி கட்டி வந்துடடி தன்னானன்னானே..’ன்னு காதலன் பாடுவான். அதற்கு அவள் வேட்டி கட்டி வந்துடுவேன்யா, ஆனா என்னை ஆம்பளைன்னு நினைச்சி பீடி கேட்பானே என்ன செய்றதுன்னு குறும்பு கொப்பளிக்கக் கேட்பாள். இப்படியே பாடல் முழுவதும் குறும்பு கேள்விகளும், குறும்பு பதில்களும் பாடல் நம்மை ஆட்டம் போட வைக்கும். பாடலில் ‘ஆட்டுக்கடை பக்கத்துல தன்னானன்னானே… நாம கூட்டுக்கடை போட்டுக்கலாம் தன்னானன்னானே…’னு கேட்பான்.

அது எல்லாம் கரெக்ட் தான்பா. அங்கே போய் நாம ஏட்டிக்குப் போட்டியா இருந்தா ஆடெல்லாம் சத்தம் போட்டு ஊரைக் கூட்டுமே.. நீ பாட்டுக்கு ஆம்பளை ஓடிடுவ. என் பொழப்பு நாறிடுமேன்னு சொல்கிறாள் காதலி. கிராமிய மணம் கமக்கும் அழகான பாடல். அதற்கேற்ற துள்ளலான இசையும் சிறுவர்களையும் சுண்டி இழுத்து ஆட்டம் போட வைத்துவிடும்.

இந்தப் பாடலை சீர்காழி சிவசிதம்பரமும், மாலதியும் சேர்ந்து பாடியிருப்பார்கள். இருவருக்குமே வசீகரிக்கும் குரல். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.