அவர் ஜெம் தான்… அஜித்குமார் ரசிகரின் நெகிழ்ச்சி பதிவு…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் எளிமையின் உருவமும் ஆனவர் நடிகர் அஜித்குமார். தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்தவர் அஜித்குமார். தமிழ் சினிமாவின் நடிகர் மட்டுமல்லாமல் ரேஸ் கார் பந்தைய வீரரும் ஆவார், நடிப்பை போலவே கார் ரேஸிங்கையும் அதிகமாக நேசிப்பவர் அஜித்குமார்.

ஆரம்பத்தில் மெக்கானிக்காக பணியாற்றிய அஜித்குமார் அதே நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார். ஹெர்குலஸ் சைக்கிள் மற்றும் மோட்டார் நிறுவனத்திற்கான விளம்பரத்தில் நடிக்கும் போது திரையுலகினரால் கவனிக்கப்பட்டார்.

1990 ஆம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ திரைப்படத்தில் பள்ளி குழந்தையாக அறிமுகமாகி தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினர் அஜித்குமார். 1993 ஆம் ஆண்டு ‘அமராவதி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். 1995 ஆம் ஆண்டு ‘ஆசை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இப்படம் வணிக ரீதியாக வெற்றிப் பெற்றது.

1997 ஆம் ஆண்டு சில படங்கள் தோல்வி அடைந்தாலும், 1998 ஆம் ஆண்டு ‘காதல் மன்னன்’ படத்தில் நடித்து காம்பேக் கொடுத்தார். அதற்கு பிறகு அஜித் நடித்த பெரும்பாலான படங்கள் அனைத்தும் வெற்றிப் பெற்று வசூல் சாதனை படைத்ததால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பெற்றார்.

தற்போது அஜித் நடித்து முடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் வெளிவர இருக்கிறது. விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்த பின்பு அஜித் செய்த செயலைப் பற்றி ரசிகர் ஒருவர் பதிவிட்டிருக்கிறார். அவர், விடாமுயற்சி ஷூட்டிங் முடிந்த பின்பு தனக்காக காத்திருந்த ரசிகர்களுடன் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு சிரித்த முகத்துடன் 600 பேருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். உண்மையில் அஜித்குமார் ஒரு ஜெம் மற்றும் லெஜெண்ட் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார் அஜித்குமாரின் ரசிகர்.