லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான திரைப்பட இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் குறும்பட போட்டியில் பங்கேற்று இவர் இயக்கிய குறும்படத்தை சமர்ப்பித்தார். அதை பார்த்த அந்த நிகழ்ச்சியின் நடுவர் கார்த்திக் சுப்புராஜ் ஈர்க்கப்பட்டு அவரை இயக்குனராக ஊக்குவித்தார். 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ். அடுத்ததாக இவர் இயக்கிய கைதி திரைப்படம் வெற்றி பெற்றது.
அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் ஹிட் ஆனது. இதனால் அனைவராலும் கவனிக்கப்பட்டு முன்னணி இயக்குனராக ஆனார் லோகேஷ் கனகராஜ். இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் ஒரு சில படங்களை தயாரித்தும் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். குறைவான படங்களை எடுத்திருந்தாலும் இவரது படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தை கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், மாஸ்டர் படத்தில் நடித்த கதாபாத்திரம் போல் விஜய் சார் இதுவரை நடித்ததில்லை. அவரை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக முதலில் மூன்று நாள் சூட்டிங்கில் அவரை சும்மாவே இருக்க வைத்தோம். அதற்குப் பிறகுதான் அவர் அந்த கதாபாத்திரத்துக்குள் ளேயே வந்தார். ஏனென்றால் அந்த கதாபாத்திரத்தை சாதாரணமாக பண்ணிவிட முடியாது. எந்நேரமும் ஒரு போதையில் இருப்பது போன்றே அந்த கதாபாத்திரத்தில் பயணிக்க வேண்டும். அதற்காக அவர் நிறைய மெனக்கெட்டார் என்று பகிர்ந்து இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
