பொழுதுபோக்கு

யார் என்ன சொன்னாலும் இந்த விஷயத்தை நினைச்சா எனக்கு படபடப்பா தான் இருக்கு… மனம் திறந்த விஜய் சேதுபதி…

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தன்னுடைய விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையினால் வளர்ந்தவர். ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து பீட்சா, தர்மதுரை, சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, விக்ரம் வேதா, ஆரஞ்சு மிட்டாய் போன்ற பல திரைப்படங்களில் வித்தியாசமான கெட்டப்புகளை தேர்ந்தெடுத்து வயசானவர் இளமை என எல்லா கதாபாத்திரங்களிலும் தனது அபாரமான நடிப்பை வெளிகாட்டி குறைந்த காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி.

நடிகராக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததன் மூலமும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்விஜய் சேதிபதி. விஜய்க்கு எதிராக மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் அவர் வில்லனாக நடித்தது பெரிதும் பாராட்டப்பட்டது. அதற்கு அடுத்ததாக சூரியுடன் இணைந்து விடுதலை திரைப்படத்தில் நடித்தார். எவ்ளோ பெரிய நடிகராக இருந்தாலும் மிகவும் யதார்த்தமாக இருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகராக இருந்துவரும் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.

தற்போது விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி இந்த பட அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியது என்னவென்றால், தலைவன் தலைவி படத்தை பார்த்துவிட்டு பலர் என்னிடம் நல்ல விமர்சனத்தை கூறினார்கள். இந்த படம் நன்றாக போகும் என்று கூறினார்கள். ஆனால் அதை எதுவுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் படத்தை மக்கள் தான் பார்த்து சொல்ல வேண்டும். என்னதான் நல்ல விமர்சனம் வந்தாலும் ஒவ்வொரு படம் ரிலீஸ் ஆகும் அன்றைக்கு எனக்கு மிகவும் படபடப்பாகத்தான் இருக்கும் என்று பகிர்ந்து இருக்கிறார் விஜய் சேதுபதி.

Avatar photo
Meena