நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் 540 கோடி வசூலை ஈட்டிய நிலையில் நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு நடிகர் விஜய் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் கசிந்து வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பாகவும், கழுகு காக்கா குட்டி ஸ்டோரி, சமூக வலைத்தளங்களில் நடைபெறும் கேவலமான சண்டை என அனைத்தையும் நடிகர் விஜய் தனது பேச்சில் கவர் செய்துள்ளார்.
குட்டி ஸ்டோரி
முன்னதாக பேசிய ரத்னகுமார் எவ்வளவுதான் உயரப் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும் என நடிகர் ரஜினிகாந்தை சீண்டுவது போல பேசியிருந்தார். அதன் பின்னர் இறுதியாக பேசிய நடிகர் விஜய், என் நெஞ்சில் குடியிருக்கும் நண்பா நண்பிகள் அனைவருக்கும் வணக்கம், உண்மையை சொல்லனும்னா நீங்கதான் உங்க நெஞ்சில என்ன குடி வச்சிருக்கீங்க என்னோட குடியிருந்த கோயில் நீங்க.. என் உடம்பை செருப்பா தச்சி உங்க கால்ல போட்டா கூட பத்தாது.. அந்த அளவுக்கு என் மேல அன்பு காட்டுறீங்க.. ஆனால், கொஞ்ச நாளா சோசியல் மீடியாவில் ஏன் இவ்வளவு கோபம்.. உங்களுக்கு நிறைய வேலை இருக்கு, பெரிய பெரிய காரியங்கள் செய்ய வேண்டியிருக்கு தேவையில்லாமல் சோசியல் மீடியாவில் நேரத்தை செலவு செய்ய வேண்டாம் எனக் கூறிய நடிகர் விஜய், மக்கள் திலகம் என்றால் அது ஒருத்தர்தான், நடிகர் திலகம் என்றால் அது ஒருத்தர்தான், புரட்சிக் கலைஞர் கேப்டன் என்றால் அது ஒருத்தர்தான், உலகநாயகன் என்றால் அது ஒருத்தர் தான் அதுபோல சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருத்தர் தான்.. தல என்றால் அதுவும் ஒருத்தர் தான்.. மக்களாகிய நீங்கள் தான் மன்னர்கள் உங்களுக்கு சேவை செய்யும் தளபதி தான் நான் என பேசியுள்ளார்.
விஜய் பேச்சு
மேலும் இறுதியாக, ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு சென்றனர் அங்கே புலி, யானை, மான், காக்கா, கழுகு என பல மிருகங்கள் இருந்தன என்றார்.. நடிகர் விஜய் காக்கா கழுகு என்றதுமே ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது.
அதன் பின்னர் மீண்டும் தனது குட்டி ஸ்டோரியை தொடங்கிய விஜய், வேட்டைக்கு சென்ற இரண்டு பேரில் ஒருவர் வில் அம்பை எடுத்துக் கொண்டு முயலை வேட்டையாடினார். இன்னொருவர் ஈட்டியை எடுத்துக் கொண்டு யானையை வேட்டையாட முயற்சித்து வெறும் கையுடன் வந்தார்.. இதில் யார் வெற்றியாளர் என்றால் யானைக்கு முயற்சி பண்ணவர் தான் என்றும் பெருசா ஏய்ம் பண்ணுங்க என விஜய் தனது குட்டி ஸ்டோரி மூலமாக ரசிகர்களை பெரிய கனவு காண சொல்லியுள்ளார்.