லோகேஷ் மற்றும் ரஜினி இணையும் தலைவர் 171 வது படத்தில் ரஜினியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியிருந்த இந்த திரைப்படம் 550 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து ரஜினிக்கு கம்பேக் கொடுத்த திரைப்படமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரஜினி அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

அந்த வகையில் ரஜினி நடிப்பில் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லாங் சலாம் திரைப்படம் வெளியாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக ரஜினியின் 170 திரைப்படத்தை ஜெய் பீம் இயக்குனர் ஞானவேலு இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த ஷெடியூல் திருநெல்வேலியில் முடிந்து தற்பொழுது மும்பையில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மும்பை செடியுலில் முன்னணி நடிகர் அமிதாப்பச்சன் படத்தில் இணைந்துள்ளார் .33 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் சூப்பர் ஸ்டார் இணைந்து நடிக்கும் திரைப்படம் இது. சமீபத்தில் தலைவர் 170 வது திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நடிகர் அமிதாபச்சன் மற்றும் ரஜினி இணைந்திருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மக்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.

மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக களமிறங்க உள்ளார். அடுத்ததாக மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங் மற்றும் பாகுபலி வில்லன் ராணா இந்த படத்தில் இணைய உள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக முன்னணி பிரம்மாண்ட இயக்குனர் லோகேஷ் உடன் கோர்க்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் லோகேஷ் இணையும் தலைவர் 171 வது திரைப்படம் மிகப்பிரமாண்டமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படம் உலக அளவில் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து சக்க போடு போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் லோகேஷ் அவர்களிடம் ஒரு பேட்டியில் தலைவர் 171 வது படம் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ் நடிகர் ரஜினியிடம் தனக்கு பிடித்தது அவரின் வில்லத்தனம் தான் அதனால் தலைவர் 171 வது திரைப்படத்தில் வில்லத்தனம் நிறைந்த ஹீரோவாக ரஜினி நடிக்க இருப்பதாக ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை கொடுத்திருந்தார்.

தளபதி 68 படத்தில் சந்தானம்! புது யுக்தியை கையாளும் வெங்கட் பிரபு!

மேலும் இந்த படத்தின் முழு கதை உருவாக்கத்திற்காக ஒரு ஆறு மாத கால விடுப்பில் இருக்க உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி கதை காண முழு கவனத்தில் ஈடுபட உள்ளதாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பிரம்மாண்ட இயக்குனர்களுடன் கைகோர்க்கும் ரஜினி 171 வது படத்தில் வாங்க இருக்கும் சம்பளம் குறித்து சில அப்டேட்கள் வெளியாகி உள்ளது. தனது 72 வது வயதிலும் முன்னணி ஹீரோவாக வளம் வரும் ரஜினிக்கு இன்றளவும் ரசிகர் கூட்டம் கோடி கணக்கில் உள்ளனர். மேலும் அவரது திரைப்படங்கள் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து வரும் நிலையில் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களுக்கு அதற்கேற்றார் போல் சம்பளம் வழங்க வேண்டும் என்பது படக்குழு முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் தலைவர் 171 வது திரைப்படத்தில் ரஜினிக்கு 250 கோடி சம்பளம் தர உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் கிசுகிசுக்கப்படுகிறது. இது குறித்து தயாரிப்பு நிறுவனங்களிடம் கேள்வி கேட்கப்பட்ட போது ரஜினியின் சம்பளத்தை விட பத்து மடங்கு லாபத்தை பட வெளியீட்டின் போது பார்க்கலாம் என்பதால் சம்பளம் குறித்த எந்த குழப்பம் தனக்கு இல்லை என்பதையும் தெளிவு படுத்தி உள்ளது. லோகேஷ் கூட்டணியில் உருவாகும் ரஜினி படத்தின் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.