இனிமே தினமும் தெறிக்கவிடப்போறோம்.. புயலுக்கு முன் அமைதியாக வந்த லியோ அப்டேட்!

Published:

நடிகர் விஜயின் லியோ படத்தின் புதிய அப்டேட் ஏதும் வரவில்லையே என விஜய் ரசிகர்கள் கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் லலித் குமாரை பயங்கரமாக ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், இன்று முதல் தவறாமல் லியோ படம் ரிலீஸ் ஆகும் வரை தொடர்ந்து ஏகப்பட்ட அப்டேட்களை வழங்கப் போகிறோம் என அறிவித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அதிரடியாக மாலை 6:00 மணிக்கு லியோ படத்தின் புதிய போஸ்டர் மற்றும் தெலுங்கு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகிறது.

லியோ மீது எதிர்பார்ப்பு:

இந்த ஆண்டு வெளியான வாரிசு திரைப்படம், மற்றும் கடந்தாண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் என இரண்டு படங்களுமே விஜய் ரசிகர்களையே பெரிதும் ஏமாற்றிய நிலையில் லியோ திரைப்படம் மாஸ்டர் படத்தை விட படு மாசாக இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அதற்கு காரணம் கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது தான். அதே போன்றதொரு இண்டஸ்ட்ரி ஹிட் தளபதி விஜய்க்கும் லோகேஷ் கனகராஜ் மூலமாக கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

லியோ புதிய போஸ்டர்:

இந்நிலையில் இன்று மாலை வெளியான அப்டேட்டில் பனி சூழ் காஷ்மீரில் ரொம்பவே அமைதியாக நடிகர் விஜய் தலையை தொங்கப் போட்டு கொண்டிருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது.

F6OidJ9b0AAF2KM 1

முடிந்தவரை போரை தவிர்ப்பவர் லியோ என்கிற கேப்ஷன் உடன் வெளியான அந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. விஜய் ரசிகர்கள் பலரும் தங்களது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் களாகவும், டிபி களாகவும் அந்தப் புகைப்படத்தை மாற்றி வருகின்றனர்.

செகண்ட் சிங்கிள் இல்லை:

தாறுமாறாக ஒரு அப்டேட் வரும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் அறிவிப்பு கூட வராமல் மட்டுமே பல குழு வெளியிட்டுள்ளது சற்றே வருத்தத்தை கொடுத்தாலும் புயலுக்கு முன் அமைதி என்கிற நோக்கத்தில்தான் இந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கூடிய சீக்கிரமே லியோ படத்தின் அதிரடி அப்டேட்கள் வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று இரவு நடந்த சைமா விருது விழா நிகழ்ச்சியில் விக்ரம் படத்திற்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விருது பெற்றார்.

மேலும், சிறந்த நடிகருக்கான விருதை கமல்ஹாசன் வென்றார். பத்தல பத்தல பாடலை பாடியதற்காக எந்த பின்னணிப் பாடகருக்கான விருதையும் கமல்ஹாசன் பெற்றார். சிறந்த இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. மாஸ்டர் படத்திற்காகவும் சைமா விருது வென்றேன் விக்ரம் படத்திற்காகவும் வென்றுள்ளேன் என லோகேஷ் கனகராஜ் பேசியுள்ளதைக் கேட்ட ரசிகர்கள் அடுத்த லியோ படத்திற்காகவும் வாங்குவீங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பை விட லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் என சினிமா வட்டாரங்கள் உறுதியான தகவல்களை தெரிவித்துள்ளன.

மேலும் உங்களுக்காக...