லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் ரிலீஸுக்காக கோலிவுட் சினிமாவே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றது. படம் துவங்கும் போது இருந்த எதிர்பார்ப்பை விட தற்போது ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரசிகர்களிடையே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
முதலில் இந்த படத்தில் இருந்து நான் ரெடி பாடல் வெளியாகியிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை. இருப்பினும் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மிகப் பிரம்மாண்டமாக வெளியாக இருந்தது.
சமூக வலைதளங்களில் விஜய்யின் லியோ பட டிரைலரை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க இந்த ட்ரைலரில் தளபதி விஜய் அவர்கள் கூறிய சில வார்த்தைகளுக்காக கடும் கண்டனங்களும் எழுந்து வருகிறது. முன்னதாக நான் ரெடி பாடலில் இடம்பெற்று சில வரிகளுக்கும் இதே போல் கண்டனம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் முழுக்க வன்முறை காட்சிகள் இருக்கின்றன என பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பல எதிர்மறையான கருத்துக்கள் இருந்த போதிலும் தளபதி விஜய் ரசிகர்களிடையே இந்த படம் குறித்த ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. விஜய்யின் லியோ திரைப்படம் இந்த மாதம் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் இந்த திரைப்படம் நடிகர் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படத்தை விட அதிக அளவில் வசூல் சாதனை செய்யும் என திரை விமர்சகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லியோ படத்தை குறித்த மிக சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. லியோ படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடித்த நடிகர் ஆத்மா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். நடிகர் ஆத்மா சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் லியோ திரைப்படத்தில் சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக இயக்குனர் லோகேஷ் அழைத்தபோது, ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் படத்தை தான் ரீமேக் செய்யப் போவதாகவும், அதனால் இந்த படத்தை பார்த்து வருமாறும் லோகேஷ் கூறியிருக்கிறார்.
பிறகு அந்த படத்தை பார்த்துவிட்டுதான் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றதாக நடிகர் ஆத்மா கூறியுள்ளார். மேலும் தான் சண்டைக் காட்சிகள் மட்டுமே நடித்திருந்தாலும் ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தை விட இந்த படம் சிறப்பாக இருப்பதாக நடிகர் ஆத்மா தெரிவித்துள்ளார். மேலும் ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் படத்தின் ரைட் உரிமையையும் லியோ பட குழு வாங்கியுள்ளதாக உறுதியான தகவலையும் வெளியிட்டுள்ளார்.
100 வது படத்தில் படுதோல்வியை சந்தித்த முன்னணி ஹீரோக்கள் யாரு தெரியுமா?
மேலும் திரில்லர் படமான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தின் ரன்னிங் டைம் ஒன்றரை மணி நேரம்தான். ஆனால் அந்தத் திரைப்படத்தை லோகேஷ் ஆக்சன் திரைப்படமாக மாற்றி இரண்டு மணி நேரம் 40 நிமிட கதை அம்சம் கொண்டதாக உருவாக்கியுள்ளார்.
முழு ரீமேக் படமாக இல்லாமல் லியோ திரைப்படம் லோகேஷ் அவர்களின் கை வண்ணத்தில் அமைந்ததால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எகிற தொடங்கியுள்ளது.