4 நாட்களில் விக்ரம் வசூல் சாதனையை முறியடித்த விஜய்யின் லியோ!.. அடுத்து ஜெயிலர் சாதனை தான்!..

By Sarath

Published:

ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் எனும் ஹாலிவுட் படத்தை தழுவி லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் 4 நாட்களில் 400 கோடி வசூலை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லியோனார்டோ டிகாப்ரியோ நடிப்பில் வெளியான கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன் படத்தின் வசூலையே முறியடித்து இருப்பதாக ஆங்கில ஊடகங்களே செய்திகளை வெளியிட்டு விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளன.

லியோவுக்கு அதிகப்படியான நெகட்டிவிட்டி

லியோ திரைப்படத்திற்கு எதிராக கம்பு சுற்றி வரும் ரமேஷ் பாலாவே லியோ திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலை கடந்து விட்டதாகவும் பல ஏரியாக்களில் படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாகவும் கூறி வருகிறார்.

மனோபாலா விஜயபாலன் ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் சன் பிக்சர்ஸ் சொல்லும் வசூலை விட அதிகமாக சொல்லி வந்த நிலையில், தற்போது விஜய்யின் லியோ அதிகாரப்பூர்வ வசூலே பொய்யான வசூல் என தொடர்ந்து எதிர்மறை கருத்துக்களையும் கணிப்புகளையும் பதிவிட்டு வருகிறார்.

தயாரிப்பு நிறுவனமே சொல்லிடுச்சு

தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் வசூலையே டூப்ளிகேட் என சொல்லி அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் இந்த முறை விஜய்யின் லியோ படத்துக்கு எல்லை மீறி பிரச்சனை செய்து வரும் நிலையில், அடுத்து வெளியாகும் ரஜினிகாந்தின் படங்களுக்கும் அஜித் படங்களுக்கும் விஜய் ரசிகர்கள் இதை விட மோசமான நெகட்டிவ் ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்வார்கள் என்றே தெரிகிறது.

ரசிகர்கள் தொடர்ந்து இப்படி மாற்றி மாற்றி சண்டையிட்டு வருவது கோலிவுட்டுக்குத் தான் கெட்ட பெயர் என்றும் இந்தியில் மட்டுமே ஓடி ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் 1100 கோடி வசூலை அசால்ட்டாக கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது என்கின்றனர்.

4 நாட்களில் 400 கோடி

நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், சாண்டி, பிரியா ஆனந்த், ஜனனி, மடோனா சபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ திரைப்படம் முதல் வார முடிவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ளதாகவும் 4 நாட்களில் 405 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாகவும் கூறுகின்றனர்.

முதல் நாள் வசூல் 148 கோடி ரூபாய் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், அடுத்தடுத்த நாட்களின் வசூலை சொல்லாமல் அமைதி காத்து வந்த நிலையில், வசூல் குறைந்து விட்டதாக ட்ரோல்கள் குவிந்து வந்தன. இந்நிலையில், இன்று 400 கோடி வசூலை லியோ ஈட்டியுள்ளது என பதிவிட்ட ஒரு ட்வீட்டை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ ரீபோஸ்ட் செய்துள்ள நிலையில், அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து விட்டனர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

4 நாட்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கி கமல் நடித்த விக்ரம் படத்தின் வசூலை லியோ முறியடித்த நிலையில், அடுத்து 525 கோடி ஜெயிலர் வசூலை ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை நாட்களிலேயே லியோ முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.