அழகா ஆயுத பூஜை கொண்டாடிய சிவகார்த்திகேயன்!.. ஹேட்டர்களுக்கு சரியான பதிலடி!..

இசையமைப்பாளர் டி. இமான் சமீபத்திய பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து விட்டதாகவும் இனிமேல் இந்த ஜென்மத்தில் சேர்ந்து பணியாற்ற மாட்டேன் என்றும் அதிரடியாக கூறிய நிலையில், சிவகார்த்திகேயன் என்ன துரோகம் செய்தார் என சொல்லாமல் இமான் ட்விஸ்ட் வைத்த நிலையில், ஏகப்பட்ட கதைகள் அவர்களது சண்டையை வைத்து வலம் வருகின்றன.

டி. இமானும் அவரது முதல் மனைவி மோனிகாவும் பிரிய காரணமே சிவகார்த்திகேயன் தான் என்றும் சிவகார்த்திகேயனுக்கும் மோனிகாவுக்கும் இடையே தகாத உறவு இருந்தது என்றும் பெரிய இடியையே இறக்கி சிவகார்த்திகேயன் இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்த இமேஜை மொத்தமாக டோட்டல் டேமேஜ் செய்து விட்டனர்.

இமான் – சிவகார்த்திகேயன் சண்டை

இசையமைப்பாளர் இமானின் மனைவி தங்கள் விவாகரத்து பஞ்சாயத்துக்காக சிவகார்த்திகேயன் பேசியதை தான் இமான் துரோகம் என்கிறார் என்றும் சிவகார்த்திகேயன் தங்கமான மனுஷன் என்றும் விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால், சிவகார்த்திகேயன் இந்த விவகாரம் பற்றி எதுவும் பேசாமல் மெளனமாக இதை கடந்து விடுவதே சரியான அணுகுமுறை என கடந்து வருகிறார். சிவகார்த்திகேயன் பற்றி தவறான சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உலாவி வரும் நிலையில், டி. இமானும் சைலன்ட்டாக அதை ரசித்து வருகிறார் என்றே கூறுகின்றனர்.

ஆயுத பூஜை கொண்டாடிய சிவகார்த்திகேயன்

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ஆயுத பூஜையை முன்னிட்டு தனது நண்பர் கலையரசன் உடன் ஆபிஸில் பூஜை போட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் பற்றி கடந்த சில நாட்களாக ஏகப்பட்ட நெகட்டிவ் கருத்துக்கள் பரவி வரும் நிலையில், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது வேலையை அடுத்த ஆண்டும் சிறப்பாக செய்ய வேண்டும் என ஆயுத பூஜையை கொண்டாடி உள்ளார்.

ஏகப்பட்ட படங்கள்

இந்த ஆண்டு மாவீரன் படத்தை ரிலீஸ் செய்த சிவகார்த்திகேயன் அடுத்த ஆண்டு அயலான் படத்தை பொங்கலுக்கு வெளியிட உள்ளார். மேலும், கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சாய் பல்லவியுடன் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த படத்தை முடித்து விட்டு அடுத்ததாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்க உள்ள படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவது குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் இமான் நடிகர் சிவகார்த்திகேயன் துரோகம் செய்து விட்டார் எனக் கூறிய நிலையில், என்ன துரோகம் என்பது குறித்து விளக்கம் கொடுத்து விட்டால் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி உருவாகும் என்றும் அதுவரை சிவகார்த்திகேயன் மீது தேவையில்லாத பழி சுற்றிக் கொண்டே இருக்கும் என்கின்றனர்.