இந்திய சினிமா உலகில் கிட்டத்தட்ட 50,000 பாடல்களுக்கு மேல் பாடி பல விருதுகளை வென்றதோடு மட்டுமல்லாமல் பல கோடி நெஞ்சங்களை வென்றவர்தான் பாடு நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம். எம்.எஸ்.விஸ்வநாதனில் ஆரம்பித்து அனிருத் வரை 4 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து பல ஆயிரக்கணக்கான ஹிட் பாடல்களைப் பாடி மக்களை மகிழ்வித்தார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அவர் மறைந்தாலும் அவரின் குரல் பல கோடி இதயங்களை இன்றும் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறது.
இவரைப் போவே இவரின் வாரிசுகளும் சினிமாத் துறையில் தடம் பதித்தனர். அதில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனான எஸ்.பி.பி.சரண் தற்போது நடிப்பு, தயாரிப்பு, பின்னனிப் பாடகர் என பன்முகம் கொண்டவராக வலம் வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகளும், எஸ்.பி.பி.சரணின் மூத்த சகோதரியுமான பல்லவியும் ஒரு பின்னணிப் பாடகர் என்பது பலரும் அறியாத தகவல்.
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று சொல்வது போல் தந்தையைப் போலவே இசைத் துறையிலும், பின்னணிப் பாடகராகவும் பல்லவி சினிமாவில் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். இவர் பாடிய அந்தப் பாடல்கள் இன்றுவரை சூப்பர் ஹிட் பாடலாக ஒலித்துக் கொண்டிருகின்றன. காதலன் படத்தில் இடம்பெறும் உதித்நாராயணன், எஸ்.பி.பி பாடிய காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்.. என்ற பாடலில் வரும் பெண்குரல் பல்லவி பாடியதே. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலேயே ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற ஹைர,ஹைர ஹைரோப்பா.. என்ற புகழ்பெற்ற பாடலும் பல்லவி பாடியிருக்கிறார்.
36 கட், 96 Mute.. கார்த்தி படத்தை அணுஅணுவாக கவனித்த தணிக்கைக் குழு..
இதுமட்டுமன்றி சமுத்திரக்கனியின் முதல் படமான உன்னைச் சரணடைந்தேன் படத்தில் அவரது தந்தை இசையிலேயே கண்ணா கலக்கமா என்ற மெலடி பாடலையும் பாடியிருக்கிறார் பல்லவி. இப்படி தொடர்ந்து பல ஹிட் பாடல்களைப் பாடியவர் திருமணத்திற்குப் பிறகு பாடுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. தந்தையைப் போலவே சினிமாத்துறையில் உச்சம் தொட வேண்டியவர் சில பாடல்களுடனேயே தன்னுடைய திரைப் பயணத்தை நிறுத்திவிட்டார். ஆனாலும் இவர் பாடிய பாடல்கள் என்றுமே எஸ்.பி.பியைப் போலவே பல்லவியையும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.