50 முறை எம்.ஜி.ஆர் பாட்டைக் கேட்ட நடிகர் திலகம் சிவாஜி.. உடனடியாக எம்.எஸ்.வி-க்குப் பறந்த தகவல்.. உருவான சூப்பர் ஹிட் பாடல்

By John A

Published:

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு தனது இசையாலும், வரிகளாலும், குரலாலும் தித்திதிக்கும் தேன்சுவைப் பாடல்களைக் கொடுத்தவர்கள் எம்.எஸ்.வி., கண்ணதாசன், வாலி, எ.எம்.சௌந்தரராஜன். இப்படி இவர்கள் கூட்டணி கொடுத்த பாடல்கள் காலங்கடந்தும் பெயர் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இனிமேல் இப்படிப்பட்ட பாடல்களும் உருவாகப் போவது கிடையாது. சிவாஜிக்கும், எம்.ஜி.ஆருக்கும் திரையிசைப் பாடல்களில் குரல் நாயகனாக ஒலித்தவர் டி.எம்.செந்தர்ராஜன்.

இவர்களுக்கு ஆஸ்தான குரலாக ஒலித்த டி.எம்.எஸ்-க்கு மாற்றாக இரு ஜாம்பவான்கள் சினிமாவில் வந்திறங்கினர். ஒருவர் கே.ஜே.யேசுதாஸ், மற்றொருவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள். இவ்விருவரின் வருகைக்குப் பின்னர் தமிழ் திரையிசைப் பாடல்களில் புதுமை ஏற்பட்டது. ஒருமுறை அடிமைபெண் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நேரம்.

அப்போது நடிகர் திலகம் சிவாஜி வீட்டில் அவரது புதல்வன் இளையதிலகம் பிரபு ஆடியோ பிளேயரில் ஆயிரம் நிலவே வா.. பாடலைக் கேட்டிருக்கிறார். எஸ்.பி.பி. முதன் முதலாகத் தமிழில் பாடி வெளிவந்த பாடல் அது. ஆனால் அதற்கு முன்பே இயற்கை எனும் இளையகன்னி பாடலைப் பாடியிருந்தாலும் இந்தப் பாடலே முதன்முதலாக வெளிவந்தது.

இவ்வாறு ஆயிரம் நிலவே வா.. பாடலை அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சிவாஜிக்கு முகம் மலர்ந்தது. பிரபுவிடம் இந்தப் பாடலை இன்னொரு முறை போடு என்று கேட்க அவரும் மறுமுறை போட்டிருக்கிறார். இப்படியே இந்தப் பாடலை அந்த நாளில் 50 முறைக்கும் மேலாக கேட்டிருக்கிறார் சிவாஜி. எஸ்.பி.பி-யின் குரலில் மெய்மறந்து போன சிவாஜி பிரபுவிடம் இது யார் குரல் என்னவென்று விசாரித்திருக்கிறார்.

40/40 ஐ வென்ற திமுக.. தனது ஸ்டைலில் வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து.. இது நல்லாயிருக்கே..!

பிரபு உடனே எஸ்.பி.பி பற்றிய தகவல்களைச் சொல்ல உடனே நடிகர் திலகம் சிவாஜி எம்.எஸ்.வி-க்கு போனைப் போட்டு தன்னுடைய அடுத்த படத்திற்கு எஸ்.பி.பி-யின் குரலில் பாடலொன்றைப் பதிவு செய்யுமாறு கேட்க, எம்.எஸ்.வி சிவாஜிக்காக சுமதி என் சுந்தரி திரைப்படத்தில் பொட்டு வைத்த முகமோ பாடலைப் பதிவு செய்திருக்கிறார். இதுதான் சிவாஜிக்காக எஸ்.பி.பி. பாடிய முதல் பாடலாகும்.

அதுமட்டுமல்லாது எஸ்.பி.பி. தான் பாடிய பாடல்களில் மிகவும் பிடித்த பாடல் என்று ராஜகுமாரன் படத்தில் பிரபுவுக்காக பாடிய என்னவென்று சொல்வதம்மா பாடலை குறிப்பிட்டிக்கிறார். அதேபோல் டூயட் படத்தில் இடம்பெற்ற என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய். பாடலும், அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி பாடலும் எஸ்.பி.பியின் குரலில் பிரபுவுக்கு சூப்பர்ஹிட் பாடலாக விளங்கியது.