40/40 ஐ வென்ற திமுக.. தனது ஸ்டைலில் வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து.. இது நல்லாயிருக்கே..!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் தேர்வு முடிவுகள் இந்தியாவையே ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வெளியான அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் தவிடுபொடியாகின. குறிப்பாக தமிழ்நாட்டில் பா.ஜ.க எப்படியாவது காலூன்றி விடும் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்லி வைத்தாற்போல் கூறின.

இதை அனைத்தும் தவிடுபொடியாகும் வகையில் திமுக 40க்கு 40 இடங்களையும் வென்று இமலாய வெற்றி பெற்றது. இதனால் திமுக வினர் உச்சகட்ட சந்தோஷத்தில் உள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக தமிழகத்தில் 39-க்கு 39 தொகுதிகளையும் ஆட்சி செய்யும் கட்சியே வென்றது மாபெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

இதனையடுத்து காங்கிரஸ்-க்கு யானைபலம் கிடைத்துள்ளது. இதனால் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. எதிர் அணியில் இருந்த பலர் டெபாசிட் இழந்தும், அதிக வாக்கு எண்ணிக்கையிலும் தோல்வி அடைந்தனர். இருப்பினும் பா.ஜ.கவிற்கு வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது பலதரப்பிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது ஸ்டைலில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காலங்கடந்தும் கொண்டாடப்படும் வாகை சந்திரசேகர் பாடல்கள்.. இவ்ளோ சூப்பர் ஹிட் பாடல்களா?

ஆரம்பத்தில் இருந்தே கலைஞர் கருணாநிதியிடம் மிகுந்த நெருக்கமாக இருந்தவர் வைரமுத்து. தினமும் கலைஞருடன் பேசும் அளவிற்கு இருவரின் நட்பும் இருந்தது. தமிழ் இவர்கள் இருவருக்குள்ளும் உள்ள நட்பினை மிக ஆழமாக வளர்த்தது. கலைஞரின் எழுத்துக்கு கவிரும், கவிஞரின் எழுத்துக்கு கலைஞரும் ரசிகர்களும் விமர்சகர்களும் கூட. கலைஞரின் அவரின் மறைவிற்குப் பின்னாலும் முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கமான நட்பு கொண்டுள்ளார். தனது வாழ்த்துச் செய்தியில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

நாற்பதுக்கு நாற்பது என்பது
மாயத்தால் நிகழ்ந்ததல்ல
நிர்வாகத் திறம் என்ற
நியாயத்தால் நிகழ்ந்தது

இந்த வெற்றி
உங்கள் ஆட்சியின்
மாட்சிக்குக் கிடைத்த சாட்சி
என்று சொல்லி
முதலமைச்சருக்குப்
பொன்னாடை பூட்டினேன்

பதற்றமில்லாமல்
வெற்றியின் பகட்டு இல்லாமல்
இயல்பான புன்னகையோடு இருந்தார்

வென்றார்க்கு அழகு
தோற்றாரை மதித்தல்

தோற்றார்க்கு அழகு
வென்றாரை வியத்தல்

பதவிக்கு அழகு
உதவிகள் தொடர்தல்

மக்களுக்கு அழகு
மறுவேலை பார்த்தல்

இவ்வாறு திமுகவின் வெற்றி பற்றி கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளத்தில் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews