மாஸ்டர் படத்தில் உள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்துவருகின்றது, அவற்றில் ஒன்று வாத்தி கம்மிங் பாடல். அந்தப் பாடலுக்கு பிரபலங்கள் பலரும் அவ்வப்போது நடனமாடி அந்த வீடியோவினை வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சமீபத்தில் நடிகை பிரகதி அவரது மகனுடன் இணைந்து அப்பாடலுக்கு நடனமாடி இருந்தார். அதனைத் தொடர்ந்து தொகுப்பாளினி சாரா அவரது சித்தியுடன் நடனமாடி இருந்தார். அதேபோல் பிக் பாஷ் பிரபலம் ரேஷ்மாவும் அதற்கு நடனமாடி இருந்தார்.
இந்தநிலையில் கடந்த வாரம் கைகளை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் வாத்தி கம்மிங்க் பாடலுக்கு அருமையாக இசை அமைத்திருந்தார்.
லாரன்ஸ் ட்விட்டரில், “அந்த இளைஞர் பெயர் தான்சேன். என்னுடைய மாற்றுத்திறனாளிகள் குழுவில் இருப்பவர். இவர் 3 நாட்கள் பயிற்சி வாத்தி கம்மிங்க் பாடலை வாசித்துள்ளார்.
இவருக்கு ஒரு பெரிய ஆசை உள்ளதாக என்னிடம் கூறினார், அதாவது அனிருத் இசையில் வாசிக்க வேண்டும் என்றும், விஜய் அவர்கள் முன்னிலையில் வாசிக்க வேண்டும் என்றும் கூறினார்” என்று பதிவிட்டார்.
லாரன்ஸ் தனிப்பட்ட முறையில் விஜய் மற்றும் அனிருத்துக்கு கால் செய்து பேசி, சம்மதம் வாங்கியுள்ளார். விஜய் லாக்டவுன் முடிந்த பின்னர் அந்த இளைஞரை அழைத்து வரக் கூறியதாகவும், அனிருத் தன் இசையில் வாசிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறியதாகவும் லாரன்ஸ் கூறியுள்ளார்.