இளையராஜா இசையில் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்கள்-பாகம் 9

இந்த பகுதியில் இன்று பார்க்க இருக்கும் திரைப்படம் அன்வேசனா. இந்த திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் கடந்த 1985ம் ஆண்டு இதே மே மாதம் 22ல் வெளியானது. பறவைகள் ஆராய்ச்சி செய்ய வரும் ஒரு பெண்ணாக…

இந்த பகுதியில் இன்று பார்க்க இருக்கும் திரைப்படம் அன்வேசனா. இந்த திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் கடந்த 1985ம் ஆண்டு இதே மே மாதம் 22ல் வெளியானது.

2c045246ff5ff8aab5c1fe00747a4dba

பறவைகள் ஆராய்ச்சி செய்ய வரும் ஒரு பெண்ணாக பானுப்ரியா, காட்டில் இருக்கும் எஸ்டேட் மானேஜராக கார்த்திக் நடித்திருந்தனர்.

புலி கிராம மக்களை அடித்து கொல்வதாக ஆரம்பிக்கும் இந்த கதை படம் நகர நகர விறுவிறுப்புக்கே கொண்டு செல்லும். காரணம் புலி யாரையும் அடித்து கொள்ளவில்லை யாரோ மனிதர்கள் செய்கிறார்கள் என கதை நகரும்.

மிகவும் சஸ்பென்சான கதை . அதற்கு இளையராஜாவின் இசை வலு சேர்க்கும். குறிப்பாக காட்டுக்குள் ஒரு கிணற்றிலிருந்து நிறைய பிணங்களை கார்த்திக்கும் பானுப்பிரியாவும் கயிறு கட்டி தூக்குவார்கள் அந்த காட்சியில் இளையராஜா பின்னணி இசையை சிதற விட்டிருப்பார். அவ்வளவு மிரட்டலாக இருக்கும்.

இப்படத்தின் பெரும்பலமே பாடல்கள்தான் பாடல்கள் ஒவ்வொன்றும் கற்கண்டாய் இனித்தன. கீரவாணி, ஏகாந்த வேளா போன்ற பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன.

தமிழிலும் இப்பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. ஏகாந்த வேளை, கீரவாணி, நிழலோ நிஜமோ, இளமை உள்ளம் போன்ற பாடல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன.

வழக்கம்போல இளையராஜா இயக்குனர் வம்சி கூட்டணி இந்த படத்திலும் முத்திரை பதித்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன