நடிகை நயன்தாரா நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், “மூக்குத்தி அம்மன் 2” என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சுந்தர் சி மற்றும் நயன்தாரா இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதன் பின்னர் நயன்தாராவை சுந்தர் வெளியே அனுப்பிவிட்டதாகவும் ஒரு செய்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.
குறிப்பாக, நயன்தாராவை பிடிக்காத YouTube-இல் பிரபலமாக இருக்கும் ஒரு சேனல் தான் இந்த வதந்தியை முதலில் கிளப்பிவிட்டது. பின்னர், அது காட்டுத்தீ போல அனைத்து YouTube சேனல்களிலும் இணையதளங்களிலும் பரவியது. சமூக வலைதளங்களிலும் இந்த விஷயம் தீயாய் பரவி வரும் நிலையில், குஷ்பு இது குறித்து தலைவர் எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
‘மூக்குத்தி அம்மன் 2’ படம் குறித்த தேவையற்ற சில கதைகள் பரவி வருகிறது. தயவுசெய்து யாரும் அதை நம்ப வேண்டாம். படப்பிடிப்பு திட்டமிட்டபடி சமரசமாக நடைபெற்று வருகிறது.
அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம் என்றால், சுந்தர் சி அவர்கள் ஒரு நேர்த்தியான, நேர்மையான இயக்குனர். அதேபோல், நயன்தாராவும் அனுபவம் கொண்ட, திறமையான நடிகை. ஏற்கனவே வெற்றி பெற்ற கதாபாத்திரத்தை மீண்டும் அவருக்கு கொடுத்திருப்பதில் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
ஆனால் இந்த ஒற்றுமையை கெடுப்பதற்காக சில பித்தலாட்டகாரர்கள் வதந்தியை பரப்பி வருகிறார்கள். எல்லாம் நல்லதற்காகத்தான் நடக்கும். உங்கள் அனைவரின் நல்லெண்ணம், ஆசீர்வாதம், அன்பு ஆகியவற்றின் காரணமாக எங்களை தொடர்ந்து ஆதரிப்பதற்கு நன்றி. தயவுசெய்து வதந்திகளை நம்ப வேண்டாம். மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் ப்ளாக்பஸ்டர் படத்தை சுந்தர் சி வழங்க உள்ளார். கண்டிப்பாக திரையில் ரசிப்பீர்கள்!” என குஷ்பு பதிவு செய்துள்ளார்.
இதை அடுத்து, நயன்தாரா மற்றும் சுந்தர் சிக்கு இடையே எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும், இந்த வதந்தி முற்றிலும் கட்டுக்கதை என்றும் நயன்தாரா மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் பரப்பப்பட்ட தகவல் என்று தெரிய வந்துள்ளது.