பொதுவாக திரையுலகில் முத்திரை பதிக்கும் பலரும், அதிர்ஷ்டம் நிறைந்த வகையில் தான் ஏதாவது திருப்புமுனை ஏற்படுத்தும். அப்படி ஒரு திருப்புமுனை ஏற்பட்டு சினிமாவில் தடம்பதித்த நடிகை ஒருவரை பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம்.
நடிகை கேஆர் செல்லம் என்பவர் மும்பையில் தனது கணவருடன் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் கணவருக்கு ஏற்பட்ட பிசினஸ் நஷ்டம் காரணமாக ஒரு பைசா இல்லாமல் சென்னை வந்தார். அதன் பிறகு அவர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி கடந்த 1950 – 60 காலகட்டத்திலேயே அவர் லட்சக்கணக்கில் சம்பாதித்து உச்சம் அடைந்திருந்தார்.
நடிகை கே ஆர் செல்வம் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாயாரை இழந்த அவர் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு மும்பையைச் சேர்ந்த இன்சூரன்ஸ் சேல்ஸ்மேன் ஒருவருடன் திருமணமானது. அதன் பின்னர் இரண்டு குழந்தைகளுடன் மும்பையில் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவரது கணவருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அனைத்து சொத்துக்களையும் இழந்தனர்.
அப்படி ஒரு சூழலில், கையில் ஒரு பைசா இல்லாமல் மும்பையில் இருந்து சென்னைக்கு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கேஆர் செல்லம் வந்தார். அவருக்கு இயல்பிலேயே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததன் காரணமாக அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். அப்படி 1935 ஆம் ஆண்டு கௌசல்யா என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு செல்லத்திற்கு கிடைத்தது. அந்த படத்தில் கிடைத்த அட்வான்ஸ் பணத்தை வைத்து அவர் குடும்பத்தை நகர்த்தினார்.
அதன் பிறகு தொடர்ச்சியாக அவருக்கு பல திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மெட்ராஸ் மெயில், வனராஜா கர்ஜன், தேசம், முன்னேற்றம், சூரிய புத்திரி, என் மனைவி, காரைக்கால் அம்மையார் போன்ற படங்களில் அவர் சுதந்திரத்திற்கு முன்னரே நடித்து பிரபலமானார். செல்லத்தின் நடிப்பின் காரணமாக ரசிகர்கள் பலரும் வெகுவாக அவர் பக்கம் கவரப்பட்டனர்.
சுதந்திரத்திற்கு பின்னரும் அவர் சமூக திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். நாம் இருவர், வேதாள உலகம், தாய் உள்ளம், வைர மாலை போன்ற படங்களில் நடித்தார். சிவாஜி கணேசன் பானுமதி நடித்த கள்வனின் காதலி என்ற திரைப்படத்தில் அவர் கே. சாரங்கபாணி மனைவியாக நடித்திருப்பார். அந்த படத்தில் அவரது கேரக்டர் சூப்பராக இருக்கும்.
இதன் பின்னர் அவர் கற்புக்கரசி, அவள் யார், ஒரே வழி, பாட்டாளியின் வெற்றி, பாவை விளக்கு போன்ற படங்களில் நடித்தார். சிவாஜி கணேசன் நடித்த பாவை விளக்கு திரைப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து நடிகர் திலகமே ஆச்சரியமடைந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தாக கூறப்படுவதுண்டு.
ஆரம்ப காலகட்டத்தில் வறுமை காரணமாக அவர் கிளாமர் ரோலில் கூட நடிக்க தொடங்கினார். குறிப்பாக வனராஜ கர்ஜன் என்ற திரைப்படத்தில் அவர் ஒரு வனப்பகுதி பெண்ணாக நடித்திருந்தார். இதில் தொடைகள் தெரிய கிளாமர் கேரக்டரில் அவர் நடித்தது அந்த காலத்திலேயே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்திய சினிமாவில் முதல் டார்சான் திரைப்படம் அதுதான் என்பதும் ஒரு தமிழ் பெண் தொடைகள் தெரிய முதல் முதலாக நடித்ததும் அந்த படத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த காட்சிக்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் திரண்டார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து பல பத்திரிக்கைகள் அவரை கவர்ச்சி நாயகி என விமர்சனம் செய்தது. ஒரு தமிழ் பெண்ணுக்கு இவ்வளவு கவர்ச்சி கூடாது என்றும் கண்டித்திருந்தது.
ஆனால் இந்த படத்தில் நான் ஒப்பந்தம் ஆகும்போது இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க வைப்பார்கள் என்று நினைக்கவில்லை என்றும் ஆனால் ஒப்பந்தம் போட்டுக் கொண்டதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் பேட்டியளித்து பரிதாபத்தை சம்பாதித்து கொண்டார் செல்லம்.
அந்த ஒரு படத்தை தவிர அவர் வேறு எந்த கவர்ச்சி கேரக்டரிலும் நடிக்கவில்லை. மேலும் அந்த காலத்தில் லக்ஸ் குளியல் சோப் விளம்பர படத்தில் நடித்தவர்தான் கேஆர் செல்லம். குளியல் காட்சியில் அவர் நடித்திருந்தது பரபரப்பை இன்னும் அந்த காலத்தில் ஏற்படுத்தி இருந்தது.