கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 21 நாள் லாக் டவுனில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். கொரோனா வைரஸில் இருந்து தற்காத்து கொள்ள சமீபத்தில் யோகிபாபு நடிப்பில் அரசு சார்பில் ஒரு ஒரு வீடியோ வெளியிடப்பட்டது அதே போல ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அமிதாப் நடிப்பில் ஒரு படம் தயாராகியுள்ளது.
இதை பிரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். ஊரடங்கு சமயத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது குறித்தும் உடல் நலனை பேணுவது குறித்தும், சமூக இடைவெளி கடைபிடித்தல், அவசியம் இல்லாமல் வெளியே வருவதை தவிர்ப்பது, முகக் கவசம் அணிவது, நோய் அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி கொள்வது உள்பட குறித்தும் கொரோனா விழிப்புணர்வு விஷயங்களை உள்ளடக்கி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.