இயக்குநர் மணிரத்னம் 1990-களிலேயே இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குநராக மாறிவிட்டார். காரணம் , மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம் என அடுத்தடுத்து தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படங்களைக் கொடுத்து சினிமா ரசிகர்களுக்கு தனது மேக்கிங் ஸ்டைலில் புது அனுபவத்தைக் கொடுத்தார்.
வசனங்கள் இன்றி அமைதியாக தெளிந்த நீரோடை போன்று மணிரத்னம் படங்களின் காட்சிகள் நகரும். இதனையடுத்து மணிரத்னம் அடுத்து என்ன படம் இயக்கப் போகிறார் என்ற ஆவல் எழுந்தது. அப்போது தான் அஞ்சலி படத்தின் அறிவிப்பு வர ரசிகர்கள் உற்சாகமாயினர்.
வழக்கம்போல் மணிரத்னத்திற்குப் பக்கபலமாக இளையராஜா துணை நிற்க, குழந்தைகளை மையமாக வைத்து அஞ்சலி கதையை இயக்குகிறார் மணிரத்னம். இந்த நிலையில் தான் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், ஆர்.வி. உதயக்குமார் இயக்கத்தில் கிழக்கு வாசல் திரைப்படமும் தயாராகிக் கொண்டிருக்கிறது. கார்த்திக் ஏற்கனவே மௌனராகம், அக்னி நட்சத்திரம் ஆகிய படங்களில் மணிரத்னத்துடன் இணைந்து சூப்பர் ஹிட் கொடுத்து செம பார்மில் இருந்தார்.
இளமை ரகசியம் உடைத்த சித்தார்த்.. மனுஷன் இன்னமும் அப்படியே இருக்காரே..!
நவரச நாயகனுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியிருந்த தருணம் அது. இந்நிலையில் மணிரத்னத்தின் படம் ஜி.வி. புரொடக்ஷ்ன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் என அதிக பட்ஜெட்டில் தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது அஞ்சலி படத்தின் பணிகளே அதிக இடங்களில் நடைபெற்றதால் கிழக்கு வாசல் படத்திற்கான போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகளுக்குக் கூட நேரமில்லை. இந்நிலையில் ஒருவழியாகப் படம் முடிந்து ரிலீஸ் ஆகியது.
இரு படங்களுமே ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகியதால் அஞ்சலி படம் திரையிட்ட இடங்களிளெல்லாம் வசூல் மழை பொழிந்தது. மேலும் அதிக தியேட்டர்களும் ஒதுக்கப்பட்டன. ஆனால் கிழக்குவாசல் படத்திற்கு குறைந்த தியேட்டர்களே கிடைத்தது.
சில நாட்கள் கழித்து நிலைமை தலைகீழாக மாறியது. கிழக்கு வாசல் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர அஞ்சலி படத்தின் காட்சிகளைக் குறைந்து கிழக்கு வாசல் படத்திற்கு காட்சிகளையும், திரையரங்குகளையும் கூட்டினார்கள். அஞ்சலி வசூல் செய்ததை விட கிழக்கு வாசல் படம் அதிக வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.