பொழுதுபோக்கு

இளமை ரகசியம் உடைத்த சித்தார்த்.. மனுஷன் இன்னமும் அப்படியே இருக்காரே..!

பாய்ஸ் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்தான் நடிகர் சித்தார்த். அதற்கு முன்னதாக  கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிறு காட்சியில் நடித்திருப்பார். சென்னையில் பிறந்து வளர்ந்த சித்தார்த்-க்கு தற்போது 45 வயதாகிறது. ஆனால் பாய்ஸ் படத்தில் பார்த்தது போலவே இன்று அதே முன்னாவாகத்தான் இருக்கிறார். மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சித்தார்த்தை, ஷங்கர் பாய்ஸ் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த தொடர்ந்து பல படங்களில் நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள மிஸ் யூ திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

பொதுவாகவே வயது ஏற, ஏற முக அமைப்பில் மாறுதல்கள் ஏற்படும். ஆனால் சித்தார்த் மட்டும் இன்றும் அதே இளமை எனர்ஜீயுடன் வலம் வருகிறார். இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சித்தார்த், நான் இளமையாக இருப்பதற்கு என்றும் தனியாக மெனக்கெட்டது கிடையாது.

போடு வெடிய.. 40,000 ரூபாய்க்கு அசத்தல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. ஓலோ நிறுவனத்தின் அசத்தல் ரிலீஸ்

ஆனால் நான் என் மூளையில் ஒரு இளைஞன் எவ்வாறு யோசிப்பாரோ அதேபோன்று தான் யோசித்துக் கொண்டே இருக்கிறேன். என்னுடைய சிந்தனை செயல்பாடு கூட இருக்கலாம். அதை என்றும் நிறுத்தியது கிடையாது. மேலும் எனது மரபு ரீதியாகக் கூட இளமையாகக் காட்சி அளிக்கலாம் என்று கூறியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக நடிகை அதிதி ராவைத் திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்தியன் 2 படத்திலும் கமலுக்கு அடுத்தபடியாக நடித்திருந்தார் சித்தார்த். மேலும் அவ்வப்போது சோஷியல் மீடியாக்களில் சமூகக் கருத்துக்களைப் பதிவிடுவதையும் சித்தார்த் நிறுத்தியதில்லை.

Avatar photo
John A

ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.