சபாஷ் மாப்ளே.. 20 நாடுகள்.. 20,000 மைல்கள்.. காரில் சகோதரர்கள் போட்ட ரோடு ட்ரிப்.. எமோஷனல் பின்னணி..

Published:

பொதுவாக சமூக வலைத்தளங்களில் நாம் அதிக நேரத்தை உலவிடும் போது மிக வித்தியாசமான சம்பவங்கள் குறித்து நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அதே போல, துணிச்சலாக சிலர் இறங்கி செய்யும் விஷயங்கள் கூட பலரது கவனத்தை ஈர்க்கக் கூடும்.

அந்த வகையில், கேரள மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் இரண்டு பேர் மேற்கொண்டு வரும் சாகச பயணமும், அதன் பின்னணியும் தற்போது பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது. கேரளா மாநிலம் சாலக்குடி பகுதியை சேர்ந்தவர்கள் தான் நோபி பவுல் மற்றும் ஜோபி ஆகியோர். இதில் நோபி மற்றும் அவரது மனைவி, குடும்பத்தினர் என அனைவரும் பிரிஸ்டல் என்னும் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றது.

இதே போல, ஜோபி தனது குடும்பத்தினருடன் ஆக்ஸ்போர்டு பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில், ஜோபி மற்றும் நோபி ஆகியோர் இணைந்து ஒரு சாகச பயணத்தை நல்ல காரியம் ஒன்றிற்காக தொடங்கி உள்ளனர். இவர்கள் இருவரும் லண்டனில் இருந்து கேரள மாநிலத்திற்கு காரிலேயே பயணத்தை தொடங்கி உள்ளனர்.

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பாக இந்த பயணத்தை ஜோபி மற்றும் நோபி ஆகியோர் லண்டனில் இருந்து தொடங்கி உள்ளனர். ரேஞ்ச் ரோவர் டிஃபண்டர் காரில் லண்டன் முதல் ஆரம்பித்த இந்த பயணமானது பிரான்ஸ், ஜெர்மனி, ஹங்கேரி, ஆஸ்திரியா உள்ளிட்ட பல நாடுகள் வழியாக சீனா, திபெத், நேபாளம் வழியாக இந்தியாவிற்கும் இவர்கள் இரண்டு பேர் பயணிக்க உள்ளனர்.

ஜோபி மற்றும் நோபி ஆகியோரின் இந்த பயணம் வெறும் சாகசமாக மட்டும் இருக்க போவதுடன் இல்லாமல், ஒரு சிறந்த தொண்டிற்காகவும் இதனை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். பிரிஸ்டலில் உள்ள வெஸ்டர்ன் அறக்கட்டளைக்காக நிதி திரட்ட வேண்டி தான் இந்த பயணத்தை கேரள சகோதரர்கள் தொடங்கி உள்ளனர்.

மேலும், தங்களின் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களை பின் தொடரலாம் என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதன் மூலம் அவர்களை சந்தித்து நிதி சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் லண்டனில் இருந்து 3 மாத காலத்தில் இந்த பயணத்தை மேற்கொண்டு இந்தியா வந்து சேரவும் அவர்கள் திட்டம் போட்டுள்ளனர்.

குடும்பத்தினர் ஆதரவுடன் இந்த பயணத்தை தொடங்கி உள்ள ஜோபி மற்றும் நோபி ஆகியோர், நல்லபடியாக கேரள மாநிலம் வந்து சேர்ந்து அறக்கட்டளை சார்பாக நிறைய உதவிகளை பலருக்கு செய்ய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.

மேலும் உங்களுக்காக...