உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் குணா. சந்தான பாரதி இயக்கிய இந்த படத்தில் ரோஷினி, ரேகா, ஜனகராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படம் 1989 ஆம் ஆண்டு ஸ்பானிஷ் மொழியில் வெளியான டை மி அப் டை மி டவுன் படத்தை அடிப்படையாக வைத்து தான் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று நடித்திருப்பார்.
இதனாலேயே படத்தின் பெயரை முதலில் மதிக்கெட்டான் சோலை என்று யோசித்த நிலையில் அதன் பிறகு தான் குணா என்று மாற்றியுள்ளனர். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் தமிழ்நாடு அரசின் விருதும் ஃபிலிம் ஃபேர் விருதும் இந்த படத்திற்கு கிடைத்தது.
அதோடு குணா படம் பலருக்கு பிடித்திருந்தாலும் சிலருக்கு பிடிக்காமல் தான் இருந்துள்ளது. திரை உலகத்தினருக்கும் இது அடங்கும். இந்நிலையில் இந்த படம் வெளியான போது பிரபல இயக்குனரான கே பாலச்சந்தர் தனது மனைவி மற்றும் கவிதாலயா கிருஷ்ணனுடன் இணைந்து திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுள்ளார்.
என் படத்துக்கு வசனம் எழுதணும்.. போன் பண்ண ரஜினி.. கமலிடம் அனுமதி கேட்ட கிரேசி மோகன்..!!
படத்தை பார்த்து முடித்துவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தபோது கே பாலச்சந்தர் கவிதாலயா கிருஷ்ணன் அவர்களிடம் என்ன கிருஷ்ணா படம் சரியில்லல்ல என்னமோ ஏதோ பண்றேன்னு சொல்லி ஏதேதோ பண்ணி இருக்கான் என்று கமலை திட்டி இருப்பார்.
இதைக் கேட்ட கவிதாலயா கிருஷ்ணன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கே படம் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு அவரும் ஆமாம் சார் ரொம்ப ஓவராக இருந்தது என கூறியுள்ளார். இதை கேட்டதும் பாலச்சந்தர் கோபமாக என்ன ஓவராக இருந்தது இப்போ ஒரு பையன் இப்படி பண்ணுவானா என்று கடுமையாக பேசியுள்ளார்.
அப்புவுக்கு ஆப்படித்த கரகாட்டக்காரன்.. கூலாக கமலை ஓவர்டேக் செய்த ராமராஜன்
இதைக் கேட்ட பாலச்சந்தரின் மனைவி நீங்கள் சொன்னது தானே கிருஷ்ணன் சொன்னான். அதற்கு ஏன் கோபப்படுகிறீர்கள் என்று கேட்டாராம். இப்படி பாலச்சந்தர் மட்டும்தான் கமல்ஹாசனை திட்ட வேண்டும் என்று நினைப்பாராம். வேறு யாரு கமலை பற்றி பேசினாலும் பாலச்சந்தர் பொறுத்துக் கொள்ள மாட்டாராம். இதனை கவிதாலயா கிருஷ்ணன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.