அப்புவுக்கு ஆப்படித்த கரகாட்டக்காரன்.. கூலாக கமலை ஓவர்டேக் செய்த ராமராஜன்

கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்தால் இன்றும் நாம் மூக்கின் மேல் விரல் வைக்காமல் இருக்க முடியாது. எப்படி கமல் இவ்வாறு குள்ளமாக நடித்திருப்பார் என்பது இன்றும் புரியாத புதிராக உள்ளது. பல நேர்காணல்களில் கமலும் இது பற்றிய கேள்விக்கு வாயை திறக்கவில்லை. தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடையாத காலத்திலும் கமல் எப்படி இவ்வாறு நடித்தார் என்பது அவருக்கும் அந்த டீமுக்கு மட்டுமே வெளிச்சம்.

ஆனால் இவ்வாறு மிகவும் கஷ்டப்பட்டு நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தை ஒரு சரியாக பிரபலம் ஆகாத நாயகன், கிராமத்து பின்புலம் கொண்ட கதை, ஒரே ஒரு கரகம் என வைத்து எடுக்கப்பட்ட கரகாட்டக்காரன் படம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே வசூலில் தூக்கிப் போட்டது. பல தியேட்டர்களில் மறு தீபாவளி கண்டது. 1989-ல் வெளிவந்த இந்தப் படம் பெற்ற வெற்றியை இன்றளவும் எந்தப் படமும் தொடவில்லை.

அப்படி என்ன இருக்கு கரகாட்டக்காரன்ல தெரியுமா? இளையராஜா, கங்கை அமரன் என்ற இரு திரை ஜாம்வான்களும் திரையின் பின்னால் இருந்து செய்த மேஜிக் தான். பொதுவாக ராமராஜனின் பெரும்பாலான படங்கள் அனைத்துமே ஓர் எளிமையான டெம்ப்ளேட்டில் இருக்கும். கிராமத்துப் பின்னணியில் ஆக்ஷன், சென்டிமென்ட், காதல், சோகம் என்று வழக்கமான கலவையில் இருக்கும். எம்.ஜி.ஆர் படங்களின் எளிய ஃபார்முலா இது. போதாக்குறைக்கு இளையராஜாவின் அற்புதமான பாடல்கள்.

இப்படியெல்லாமா கூட யோசிப்பாங்க… பட டைட்டிலில் உலக நாயகன் செஞ்ச தரமான சம்பவம்

போதாதா? ஜனரஞ்சக அம்சங்களைத் தாண்டி ராமராஜன் படங்களின் வெற்றிக்கு ராஜாவின் இசையும் ஒரு முக்கியமான காரணமாக இருந்ததை எவராலும் மறுக்க முடியாது. ஆரம்பக் கட்டத்தில், சில சிறிய பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த ராமராஜன் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக மாறினார். பிறகு அவரே ஹீரோவாக நடித்த சில திரைப்படங்கள் வெற்றி பெறத் துவங்கின.

கங்கை அமரன் இயக்கத்தில் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘செண்பகமே… செண்பகமே’ போன்ற திரைப்படங்கள் பரவலான வெற்றியைப் பெற்றன. கிராமத்துப் பின்னணியில் இவர் நடித்த திரைப்படங்கள், பி மற்றும் சி சென்டர் பார்வையாளர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. இந்த வளர்ச்சியின் உச்சக்கட்டம் என்பது ‘கரகாட்டக்காரனில்’ நிகழ்ந்தது.

‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தின் அடிப்படையான கதை என்பது 1968-ல் வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் அப்பட்டமான நகல் என்பது அனைவருக்குமே தெரியும். இது போன்ற விஷயங்களை ஒப்புக் கொள்வதில் கங்கை அமரன் அலட்டிக் கொண்டதேயில்லை.

தமிழ் சினிமாவின் வழக்கமான ஃபார்முலா படி, ஹீரோவிற்கும் ஹீரோயினுக்கும் முதலில் ஏற்படும் மோதல், போட்டி, பிறகு உருவாகும் காதல், பிரிவுத் துயரம், பண்ணையார் வில்லன், சண்டைக்காட்சிகள், அம்மா சென்டிமென்ட் என்று பலவற்றைக் கலந்து உணர்ச்சிகரமான கிளைமாக்ஸை அமைத்து பிறகு மங்களகரமாக ‘சுபம்’ போட்டதில் ‘கரகாட்டக்காரன்’ வணிகரீதியாகப் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.