இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்கத்தில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஜெயக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனுக்கு பதில் வேறு இரண்டு முன்னணி நடிகர்களை தான் நடிக்க வைக்க நினைத்தேன் என்று ஓபனாக பேசியுள்ளார்.
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் ஜெயக்குமார் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் ப்ளூ ஸ்டார் படத்தில் சாந்தனு, அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், பிருத்வி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ப்ளு ஸ்டார் கடந்த மாதம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
கவின், ஹரிஷ் கல்யாண்:
பா.இரஞ்சித் இயக்குநராக மட்டுமன்றி தற்போது தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். தான் வளர்ந்தது மட்டுமல்லால் புதிய இயக்குநர்களையும் அறிமுகப்படுத்துகிறார். அந்த வகையில் தனது நண்பனான ஜெயக்குமாருக்கும் வாய்ப்பளித்து ப்ளு ஸ்டார் என்ற படத்தை தயாரித்துள்ளார். மேலும், மாரி செல்வராஜ், அதியன் ஆதிரை போன்ற இயக்குநர்களை வைத்து படங்களை தயாரிக்கிறார்.
இயக்குநர் பா,இரஞ்சித் ப்ளு ஸ்டார் வெற்றி விழா நிகழ்ச்சியில் பேசுகையில் சமூகத்தின் மீது பற்று வைத்துள்ள தன் நண்பனான ஜெய்யை இயக்குநாராக்க விருப்பினேன். மேலும் நம் நாடு அழிவை நோக்கி சென்றுக்கொண்டு இருக்கிறது நம் நாட்டை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என்று தேசபக்தியுடன் பேசியுள்ளார். அதை தொடர்ந்து அயோதியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதில் தனக்கு விமர்சனம் உள்ளதாக படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசியது பெரிய புரமோஷனாக மாறியது.
கிரிக்கெட் விளையாட்டில் இருக்கும் இரண்டு டீம்களும் எதிர்த்து நிர்க்காமல் சேர்ந்து செயல்பட்டால் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்கலாம் என்பதை மையமாக வைத்தும் கதையை உருவாக்கியுள்ளார். இப்படத்துக்கு போட்டியாக வெளியாகிய சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தைவிட ப்ளூ ஸ்டார் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
ப்ளூ ஸ்டார் வெற்றி:
ப்ளு ஸ்டார் படத்தின் சக்சஸ் மீட்டின் போது பேசிய அசோக் செல்வனுக்கும் இப்படம் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்திருக்கிறது. நேற்று, எனது என்ட்ரியின்போது இந்தப் படத்தில்தான் கைத்தட்டல் வாங்கினேன் என்று கூறியிருந்தார். சாந்தனுவும் பல வருடங்களாக முயற்சிக்கும் தனக்கு இது முதல் வெற்றி என்றும் அப்பா பாக்கியராஜ் எழுதிய கடிதத்தையும் படித்துக் காட்டினார்.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் ஜெயக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் முதலில் இப்படத்தில் கவின் மற்றும் ஹரிஷ் கல்யாணை வைத்து தான் படத்தை உருவாக்க நினைத்தேன் என்றும் படத்தின் கதை அவர்களுக்கு பிடித்து சில தயாரிப்பாளர்களையும் பார்க்கச் சொன்னார்கள். ஆனால், இருவரும் மற்ற படங்களில் கமிட்டாகி விட்டதால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. அதற்கு பிறகுதான் கவினுக்கு பதிலாக அசோக் செல்வன் கமிட்டானர். ஹரிஷ் கல்யாணுக்கு பதில் சாந்தனு கமிட் ஆனார் என்றார்.
கடைசியாக கவின் நடிப்பில் வெளியான டாடா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதே போல ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படமும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.