‘லொடுக்குப் பாண்டி‘யாக நந்தா படத்தில் அறிமுகமாகி பின்னர் மளமளவென திரைப்படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர்தான் கருணாஸ். திரையுலகில் இயக்குநர் பாலா அறிமுகப்படுத்திய கருணாஸ் ஆரம்பத்தில் மேடைக் கச்சேரிகள் பாடி வந்துள்ளார்.
இவருடைய ‘ஒத்தகல்லு ஒத்தகல்லு மூக்குத்தியாம்‘ இசை ஆல்பம் இவரை சிறந்த நாட்டுப்புற இசைக் கலைஞராக அறியச் செய்தது. அதன் பின் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற அரசியல் அமைப்பை நிறுவி அஇஅதிமுகவுடன் தன்னை இணைத்துக் கொண்டு திருவாடனை தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
நடிகர், பாடகர், இசையமைப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட கருணாஸின் திருமணம் காதல் திருமணம். இவரது மனைவி கிரேஸ் பாடகரும் கூட. இவர்களது லவ் ஸ்டோரி சற்று சுவாரஸ்யம் நிறைந்தது. அண்மையில் பேட்டி ஒன்றில் இவர்களது காதல் கதை பற்றிக் கருணாஸ் கூறும் போது, “கல்லூரி இசை நிகழ்ச்சி ஒன்றில் அப்பொழுதுதான் கிரேஸை பார்த்தேன். பூ பூக்கும் ஓசை பாடலை பாடிக் கொண்டிருந்தார்.
இவ்வளவு கொச்சை வார்த்தையா? ..ச்சீ என்ன விளையாடுறாங்க? அறந்தாங்கி நிஷா பளார் பேட்டி
அந்நிகழ்ச்சிக்கு நான் நடுவராகச் சென்றிருந்தேன். கிரேஸ் பாடத் தொடங்கும் போது அவரைப் பார்த்ததும் காதல் வயப் பட்டேன் எனவும், இவரைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாக கூறினார்.
மேலும் அவர் தொடர்ந்து கிரேஸ்க்கு காதல் தூது விட முதலில் மறுத்ததாகவும் பின்னர் அவருடைய கேரக்டர் பிடித்துப் போய் காதலுக்கு பச்சைக் கொடிகாட்டியதாகவும் அதன்பின் பல்வேறு போராட்டங்களுக்கிடையே எங்கள் திருமணம் நடந்ததாகவும் கூறினார். கருணாஸ் கிரேஸை கல்யாணம் முடிக்கும்போது எவ்வித சொத்துக்களோ, பணமோ இல்லை எனவும் அதன்பின்னர் திரைப்படங்களில் நடித்துத்தான் சொத்துக்களை சேர்த்ததாகக் கூறினார்.
கருணாஸ் இந்து, முக்குலத்தோர் இனத்தைச் சார்ந்தவர். ஆனால் மனைவி கிரேஸ் கிறிஸ்தவ மதம் சார்ந்தவர். இதுகுறித்து கருணாஸ் கூறும் போது “நீங்க மதத்தை கல்யாணம் பன்றீங்ளா? இல்லை காதலிய கல்யாணம் பன்றீங்களா? எனவும் காதலுக்கு ஜாதி,மதம் தடைகள் ஏதும் இல்லை“எனவும் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
கருணாஸ் மகளுக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்த நிலையில், மகன் கென் கருணாஸ் தனுஷுடன் அசுரன், வாத்தி ஆகிய படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.