இவ்வளவு கொச்சை வார்த்தையா? ..ச்சீ என்ன விளையாடுறாங்க? அறந்தாங்கி நிஷா பளார் பேட்டி

சந்தானம் முதல் சிவகார்த்திகேயன் வரை எண்ணற்ற பிரபலங்கள் வரை தமிழ்சினிமா உலகிற்குக் கொடுத்தது தான் விஜய்டிவி. இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மூலமாக தங்களது தனித்திறனை நிரூபித்து டைட்டில் வின்னராகவும், அதுமட்டுமல்லாது இதர கலைஞர்கள் மற்ற நிகழ்ச்சிகளிலும் வாய்ப்பு பெற்று சாதனையாளர்களாக வலம் வருகின்றனர். அவற்றில் குறிப்பிடத்தகுந்தவர் அறந்தாங்கி நிஷா.

கலக்கப்போவது யாரு என்ற காமெடி ஷோ மூலமாக அதுவரை ஆண்கள் மட்டுமே காமெடியில் பங்கேற்று திறமைகளைக் காட்டிவந்த வேளையில் ஒரு பெண்ணாக ஷோவில் பங்கேற்று தனது திறமையை நிரூபிக்க அள்ளிக் கொண்டது சினிமா உலகம். இன்று அறந்தாங்கி நிஷாவின் காமெடியை ரசிக்காதவர்கள் எவரும் இல்லை எனலாம்.

தற்போது அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் சீசன் 7-ல் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டது குறித்து காரசாரமாக தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். பிக்பாஸ் சீசன் 7 கொஞ்சமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கும் வேளையில் கடந்த வாரம் பிரதீப் ஆண்டனிக்கு ரெட்கார்டு கொடுத்து கமல்ஹாசன் வெளியேற்ற பிக்பாஸ் ரசிகர்கள் ஷாக் ஆகினர்.

அதுவும் அவர் பிக்பாஸ் வீட்டில் இருப்பது உடன் இருக்கும் பங்கேற்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கமல் கூறியதுதான் பலராலும் ஏற்றுக் கொள்ள முடியாத காரணமாக உள்ளது.

இந்நிலையில் பல பிரபலங்களும் இதுகுறித்து எதிர்ப்பை பதிவு செய்ய அறந்தாங்கி நிஷாவும் பேட்டி ஒன்றில் காரசாரமாக இதுகுறித்து பதில் அளித்துள்ளார். அப்பேட்டியில், “பிரதீப் ஆண்டனிமேல் பழிபோட்டது மிகப்பெரிய தவறு. ஒரு டைட்டில் வின்னராக வரக்கூடிய வாய்ப்பு உள்ளவர் அவர்.

சினிமாவுல ஒருத்தர் கூட சப்போர்ட் பண்ணல.. புலம்பித் தீர்த்த ரஞ்சனா நாச்சியார்

ஜோவிகாவை நாயே என்று சொன்னது தனக்கு கேட்டது என்றும் அதற்காக மன்னிப்பு கேட்டவரா பொம்பளை பொறுக்கி என்றும் காரசாரமாக கூறினார். மேலும் அவருக்கு பைத்தியம் என்று முத்திரை குத்தியது ஏற்றுகொள்ளாத விஷயம். கமல் சார் இதுகுறித்து விசாரித்திருக்க வேண்டும்.

Pradeep

பெண்கள் கொச்சை வார்த்தைகள் நிறைய பேசியிருப்பது இந்த சீசனில் தான்.  5 பெண்கள் சேர்ந்து ஒருத்தரை தூக்கி வெளியில் போடுவதற்குப் பெயர் தான் ரூபிஸம்” என்றும் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார். பிரதீப்க்கு ஆதரவாக பெண்கள் பலருமே கருத்துக்களைத் தெரிவித்து வர இனி பிக்பாஸில் அடுத்த என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...