அதென்ன 8 அடுக்கு மாளிகை.. கண்ணதாசன் தத்துவப் பாடலில் இப்படி ஓர் விளக்கமா? மெய்சிலிர்த்த இயக்குநர்

By John A

Published:

இன்றும் கண்ணதாசனின் தத்துவப் பாடல்கள் நம்மை ஆட்கொண்டிருக்கிறது என்றால் அது இயக்குநர் சங்கரின் கைவண்ணத்தில் உருவான படங்களில் தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. எம்ஜிஆர், சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன் என மூவேந்தர்களுக்கும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். குறிப்பாக ஆலயமணி, குடியிருந்த கோவில், அடிமைப்பெண் என கிளாசிக் படங்களைத் காவியங்களை தமிழ்சினிமாவுககுத் தந்தவர்.

படத் தொகுப்பாளராக இருந்து பின்னர் இயக்குநராக மாறிய சங்கர், 1959ல் மருது சகோதரர்களின் வீரத்தை திரையில் காட்டியவர். ஆனால் அதே ஆண்டில் சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்டபொம்மன் வெளிவந்து பெரிய அளவில் பேசப்பட்டதால் சங்கரின் ‘சிவகங்கை சீமை‘ அந்த அளவுக்கு பேசப்படாமல் போய் விட்டது.

இப்படி தமிழ் சினிமாவின் எவர்கிரீன் கிளாசிக் ஹிட் படங்களைக் கொடுத்த சங்கர் கண்ணதாசன் மேல் அளவற்ற பற்று கொண்டிருந்தார். இவர்கள் கூட்டணியில் 1962-ல் வெளியான ஒரு திரைப்படம் தான் பாத காணிக்கை.ஜெமினி கணேசன், சாவித்திரி, அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குழந்தை நட்சத்திரமாக உலக நாயகன் கமல்ஹாசனும் நடித்திருந்தார்.

மொழி படத்துல இத யாரெல்லாம் கவனிச்சீங்க.. ராதாமோகன் செஞ்ச தரமான சம்பவம்..

கேட்டாலே அழுகை வரத் தோன்றும் வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி.. என்ற தத்துவப் பாடல் இடம்பெற்ற திரைப்படம். மேலும் ஜெமினியின் ஆஸ்தான குரல் நாயகனான பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய பூஜைக்கு வந்த மலரே வா போன்ற கிளாசிக் ஹிட் பாடலும் இதில் இடம்பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு தத்துவப் பாடல்தான்

எட்டடுக்கு மாளிகையில்
ஏற்றி வைத்த என் தலைவன்
விட்டு விட்டு சென்றானடி இன்று
வேறுபட்டு நின்றானடி

இந்தப் பாடல் ஜெமினி கணேசனை நினைத்து சாவித்ரி பாடுவதாக அமைந்திருக்கும். இந்தப் பாடலை எம்.எஸ்.வி., ராமமூர்த்தி இசையில் சுசீலா பாடியிருப்பார். இந்தப் படத்தின் வெற்றி விழாவின் போது கவிஞர் கண்ணதாசனிடம் இயக்குநர் கே.சங்கர் அதென்ன எட்டடுக்கு மாளிகையில்.. ஜெமினிகணேசன் வசதியானவர்தான்.

இருப்பினும் எட்டடுக்கு மாளிகை அவரிடம் இல்லையே என்று கூறியுள்ளார். அதற்கு கண்ணதாசன் சிரித்துக் கொண்டே எட்டடுக்கு மாளிகை என்று ஜெமினியின் செல்வச் செழிப்பைப் பற்றிக் கூறவில்லை. மாறாக ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது உடல் அவன் கைன் 8 ஜான் அளவிற்குத் தான் இருக்கும். இதான் எட்டடுக்கு மாளிகை என்று கூறி, எனவே அதனை விளக்கவே அவ்வாறு பாடல் எழுதினேன் என்று கே.சங்கரை வியக்க வைத்துள்ளார் கண்ணதாசன்.