குயின், மணிகர்ணிகா உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா ரனாவத் சில ஆண்டுகளாக ஹிந்தி சினிமாவில் சொதப்பி வருகிறார். அவர் நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் படுதோல்வியை சந்தித்து வந்த நிலையில், தாம்தூம் திரைப்படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமா பக்கம் ஒதுங்கினார்.
கங்கனாவிற்கு கைகொடுத்த சந்திரமுகி 2:
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் நடித்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்று விடலாம் என நினைத்தார். ஆனால் அந்த படம் கங்கனா ரனாவத்துக்கு 20 கிலோ அதிகமாக எடையை ஏற்றி நடித்தும் கைகொடுக்கவில்லை.
ஆனால் தனது முயற்சியை கைவிடாமல் பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக நடித்து கடைசியாக வெற்றியை பெற்றுள்ளார் என்று தான் கூற வேண்டும்.
சந்திரமுகி 2 இரண்டாம் நாள் வசூல்:
சந்திரமுகி 2 திரைப்படம் முதல் நாளில் ஐந்து முதல் ஏழு கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில் இரண்டாவது நாள் ஏழு கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக கங்கனா ரனாவத் நடித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படம் 14 கோடி ரூபாயை இரண்டு நாட்களில் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கில் கணித்துள்ளனர்.
ஆனால் இதுவரை லைக்கா நிறுவனம் எந்த ஒரு அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெய்லர் படத்துக்கு சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ வசூல் வெளியிட்டு இருந்தது. பொன்னியின் செல்வன் படத்திற்கு லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டிருந்தது. ஆனால் சந்திரமுகி 2 ரஜினி நடிக்காத காரணத்தால் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தவில்லை. ஆனால், ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத்துக்கு நல்ல ஓப்பனிங் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.
ரஜினி நடித்திருந்தால்:
சந்திரமுகி 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தால் முதல் நாள் வசூலை 100 கோடி ரூபாயை தொட்டிருக்கும் என்று ராகவா லாரன்ஸ் நடித்த நிலையில், இந்த படத்தின் ஹைப் மற்றும் வசூல் சுமாராகவே உள்ளதாக கூறுகின்றனர்.
மேலும் படத்திற்கு அதிகப்படியான மிக்ஸட் விமர்சனங்களை குவிந்து வருகின்றன. ஒரு பக்கம் படம் சூர மொக்கை என்றும் குடும்ப ரசிகர்கள் இந்தப் படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் முதல் பாகத்தில் இருந்த அளவுக்கு வடிவேலின் காமெடி கைகொடுக்கவில்லை சந்திரமுகி 2 படத்தில் என்பதுதான் ரசிகர்களின் பெரிய குறையாக உள்ளது.
பாலகிருஷ்ணா படங்களில் வரும் சண்டை காட்சியைப் போல ராகவா லாரன்ஸின் அறிமுக சண்டைக் காட்சிகள் இருந்தாலும், லட்சுமி மேனனின் நடிப்பு மற்றும் இரண்டாம் பாதியில் அழகு பதுமையாக வரும் ரங்கநாதன் நாகத்தின் சந்திரமுகி தரிசனம் இந்தப் படத்திற்கு பக்கபலமாக உதவியுள்ளது என்கின்றனர்.