சினிமா உலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக தடம்பதித்து செய்யாத புதுமைகளே இல்லை என்னும் அளவிற்கு அசத்தி வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். 1960-ல் பீம்சிங் இயக்கிய களத்தூர் கண்ணம்மாவில் செல்வம் என்ற பாலகனாக வந்து பின்னர் உலக சினிமாவையே புரட்டிப்போட்ட சினிமா ஜாம்பவான்.
தன்னுடைய 70 வயதிலும் கால்ஷீட்கள் நிரம்பிவழிய அடுத்தடுத்த அப்டேட்களால் கோலிவுட்டை அலற விடுகிறார் உலக நாயகன். விக்ரம் படத்தின் வெற்றி இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றையே உடைக்க தற்போது இந்தியன் -2, ஹெச் வினோத் இயக்கத்தில் KH233, அதன்பிறகு மணிரத்னத்தின் KH 234 என அடுத்தடுத்து பிஸியாக இருக்கிறார். மேலும் இந்திய சினிமா ஜாம்பவான்கள் நடிக்கும் Project K படமும் உலக நாயகன் இவரது லிஸ்ட்டில் இருக்கிறது.
இவ்வாறு இருக்க தனது கனவுப் படமான மருதநாயகத்தை மீண்டும் தொடங்குவாரா என்று அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளனர். இந்திய விடுதலைப் போராட்ட வீரரான மருதநாயகம் என்ற முகம்மது யூசுப் கான் வரலாற்றை படமாக்கும் முயற்சியில் உலகநாயகன் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டார்.
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தை இந்தியா வரவழைத்து இப்படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்கச் செய்தார். மேலும் இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. கமல்ஹாசனும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆக படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.
இந்தியன் 2 இன்ட்ரோவை ரிலீஸ் செய்த ரஜினிகாந்த்!.. கம்பேக் கொடுத்த இந்தியன் தாத்தா.. எப்படி இருக்கு?
இருந்த போதிலும் கடந்த 2016-ல் மீண்டும் மருதநாயகம் படத்தின் முன்னோட்ட பாடல் காட்சியில் கமல்ஹாசன் கோவணத்துடன் மாட்டின் மீது அமர்ந்து எதிரிகளைத் தாக்கும் காட்சி புல்லரிக்க வைத்தது. இதனால் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என எதிர்பார்த்த நிலையில் கமல்ஹாசன் படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்றும் எந்தஒரு தயாரிப்பாளராவது முன்வந்தால் மீண்டும் மருதநாயகம் துவங்கலாம் என தெரிவித்திருந்தார்.
தற்போது பிரம்மாண்ட பட்ஜெட்களில் படங்கள் உருவாகிக் கொண்டிருக்க மருதநாயகம் படிப்பிடிப்பு மீண்டும் துவங்கினால் கமல்ஹாசனின் கனவுப் படம் விரைவிலேயே வெள்ளித் திரையிலும் காணலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.