இந்தியன் 2 இன்ட்ரோவை ரிலீஸ் செய்த ரஜினிகாந்த்!.. கம்பேக் கொடுத்த இந்தியன் தாத்தா.. எப்படி இருக்கு?

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ வீடியோவை தற்போது இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், அமீர் கான், ராஜமெளலி, மோகன்லால், கிச்சா சுதீப் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

5 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்துக்கு பிறகு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் அந்த படத்தை தூசு தட்டி ஷங்கர் இயக்கி உள்ளார்.

இந்தியன் 2 இன்ட்ரோ வெளியீடு:

வழக்கம் போலவே அவர் படங்கள் எப்படி பிரம்மாண்டமாக இருக்குமோ அதே போல இந்தியன் 2 படமும் காட்சிகளாக பிரம்மாண்டத்தை காட்டுகின்றன.

மோடி அரசை எதிர்க்கும் விதமாக கொரோனா காலத்தில் தட்டும் கரண்டியும் வைத்துக் கொண்டு தட்டியது, மெழுகுவர்த்தி ஏற்றி நின்றது என பல நய்யாண்டி விஷயங்களையும் தனது பாணியில் ஷங்கர் வைத்துள்ளார்.

பிரம்மாண்ட பாடல் காட்சிகளும் இந்தியன் 2 படத்திலும் இருப்பதை இன்ட்ரோ வீடியோவிலேயே காட்டியுள்ளார். நாட்டில் மீண்டும் ஊழல் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், இந்தியன் தாத்தாவை மக்கள் மீண்டும் எதிர்பார்த்து காத்திருப்பது போலவும், இந்தியன் தாத்தாவாக கமல்ஹாசன் 90 வயது நபராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போட்டோவுக்கு முன்பாக வந்து நின்று வணக்கம் இந்தியா.. இந்தியன் இஸ் பேக் என சொல்லும் அறிமுக வீடியோ இணையத்தை ஆட்டிப் படைத்து வருகிறது.

ஷங்கரின் பிரம்மாண்டம்

ஏ.ஆர். ரஹ்மானின் இசை ரொம்பவே மிஸ் ஆவதாக ரசிகர்கள் ஃபீல் செய்து வருகின்றனர். அனிருத் இசையில் ஒரு துள்ளல் இருந்தாலும், பாலிவுட் ஷாருக்கானின் ஜவான் படத்துக்கு போட்டது போல தீம் மியூசிக் போட்டிருப்பதாகவும், நடிகர்கள் எல்லாம் கொஞ்சம் அவுட் டேட்டடாக உள்ள நிலையில், ஷங்கரின் திரைக்கதை மற்றும் கமல்ஹாசனின் நடிப்பு பெருமளவில் இந்த படத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற பேச்சுக்களும் எழுந்துள்ளன.

இந்தியன் படத்தில் இடம்பெற்ற காட்சிகளும், அதன் தொடர்ச்சியாகவும் இன்ட்ரோவில் காட்சிகள் இடம்பெற்றிருப்பது கச்சிதமாக பொருந்துகிறது. நடிகர் சித்தார்த் இந்த படத்தில் சந்துரு கமலின் மகனாக நடித்துள்ளார் எனக் கூறுகின்றனர். அவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். பணக் கட்டுகளை உடம்பில் பதுக்கி வைத்துக் கொண்டு வருவது, ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் என ஹீரோயின்கள், மறைந்த நடிகர்களான விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த இன்ட்ரோ வீடியோவில் இடம்பெற்றுள்ளனர்.

25 வருஷம் கழித்து மீண்டும் வரும் இந்தியன் தாத்தா என்ன மாதிரியா விளைவுகளை இந்திய சினிமாவில் உருவாக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...