தமிழ் சினிமாவில் இருந்து உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களில் ஏதாவது ஒரு விஷயம் புதியதாக இருப்பதுடன் ஹாலிவுட்டிற்கு சவால் விடும் பல விதமான தொழில்நுட்பங்களையும் தமிழ் திரைப்படங்களில் பயன்படுத்தி உள்ளார். ஒரு காலத்தில் எக்ஸ்பரிமண்டலாக ஏராளமான திரைப்படங்கள் செய்து வந்த கமல்ஹாசன், விக்ரம் என்ற திரைப்படத்தின் மூலம் முழுக்க முழுக்க கமர்சியல் பக்கம் இறங்கி உள்ளார் என்றே சொல்லலாம்.
லோகேஷ் கனகராஜ் திரைப்படமான விக்ரம், பல கோடி ரூபாய் வசூல் செய்து கமல் கேரியரில் அதிக ரூபாய் வசூல் செய்த திரைப்படமாகவும் அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தேர்வு செய்து வரும் திரைப்படங்களும் ஏறக்குறைய கமர்சியல் ரகத்தில் தான் இருந்து வருகிறது. மணிரத்னம் இயக்கும் தக் லைஃப், ஷங்கர் இயக்கத்தில் இறுதி கட்டப் பணிகளில் உள்ள இந்தியன் 2, அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் புதிய படம் என கமலின் வரிசையே மிக தரமாகவே உள்ளது.
ஒவ்வொரு படத்தின் மீதான ஆவலும் அதிகமாக இருப்பதால் இந்த படத்தின் ரிலீசுக்காகவும் ரசிகர்கள் காத்திருந்து வருகின்றனர். இந்த நிலையில் கண்ணதாசன் தனது திரைப்படத்துக்கு பாட்டு எழுதுவது பற்றி தெரிந்ததும் அந்த படத்தில் கமல்ஹாசன் நடிக்க மறுத்தது குறித்த தகவலை தற்போது பார்க்கலாம். குடிசை என்ற திரைப்படத்தை இயக்கி பிரபலமானவர் தான் ஜெயபாரதி. இவர் இரண்டு பேர் வானத்தை பார்க்கிறார்கள் என்ற கதையை எழுதி முடித்துவிட்டு இயக்கவும் தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.
எம்.ஆர். ரமேஷ் என்பவர் இந்த படத்தை தயாரிக்க முன்வந்த நிலையில் கமல் நடித்தால் தன்னால் முதலீடு செய்ய முடியும் என்றும் இயக்குனர் ஜெயபாரதியிடம் கூறியுள்ளார். கமல்ஹாசனை நேரில் சந்தித்து அவரிடம் கதையும் சொல்லி அட்வான்ஸ் பணத்தையும் கொடுத்துள்ளனர். கமல்ஹாசன் உடனடியாக இந்த படத்திற்கு சம்மதம் சொல்ல மிக முக்கியமாக காரணமாக இருந்தது இந்த படத்தின் திரைக்கதை தான்.
பாடல்களே இல்லாமல் இந்த படத்தின் கதையை ஜெயபாரதி சொல்லி இருந்த நிலையில் படத்தின் பணிகள் தொடங்கும் போது இதில் பாடல்கள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும் என்றும் தயாரிப்பாளர் எம் ஆர் ரமேஷ் கூறியுள்ளதாக தெரிகிறது. அத்துடன் கண்ணதாசனை வைத்து இந்த படத்தில் நான்கு பாடல்களை எழுதி அதற்கான கம்போசிங் பணிகளையும் தொடங்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றது.
பாடல்கள் இல்லாமல தான் நடிக்க தயாரான ஒரு திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இருப்பதாக கமலுக்கும் தெரியவர உடனடியாக ஜெயபாரதியை அழைத்து இதுபற்றி கேள்வி கேட்டுள்ளார். தற்போது தான் நடித்து வரும் திரைப்படங்களில் பாடல்கள் பாடி, நடனமாடி வரும் சூழலில் அப்படி எதுவும் இல்லாத ஒரு திரைக்கதை என்பதால் தான் சம்மதம் சொன்னதாகவும் இப்போது நான்கு பாடல்களை ரெடி செய்து விட்டீர்கள் என்பதால் நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்றும் கமல் பிடிவாதமாக கூறியுள்ளார்.
ஆனால் கமலை சமரசம் செய்து எப்படியாவது இந்த படத்தில் நடிக்க வைக்க ஜெயபாரதி முயற்சி செய்தும் அதற்கு பலனில்லாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.