பிரபு கோவிச்சுக்கிட்டாலும் பரவாயில்லை.. சிவாஜி பற்றி கமல் சொன்ன தகவல்!

By Staff

Published:

இந்தியன் 2 படத்தைப் பொறுத்த வரைக்கும் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், சமீபத்தில் இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. படத்திற்கான வரவேற்பு ஒரு பக்கம் இருக்க, இந்த படத்தில் நடித்த சில நடிகர்கள் இன்று நம்மிடம் இல்லை.

நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா மூன்று பேருமே இந்த திரையுலகில் ஒரு பெரிய சாதனையை படைத்த கலைஞர்கள் .இவர்கள் மூன்று பேரின் கதாபாத்திரங்களும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் தான். இதைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கமல் கூறி இருக்கிறார்.

இந்திய திரை உலகின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நெடுமுடி வேணு என கமல் கூறினார். அதேபோல் விவேக் பற்றி கூறும் போது சின்ன கலைவாணர் என பெயர் எடுத்தவர் விவேக். அதனால் கலைவாணருக்கு நெருக்கமான சில பேர் கோபப்படும் அளவுக்கு விவேக் புகழ்பெற்றார்.

இதில் என்னுடைய கேள்வி என்றால் ஏன் அந்த கலைவாணர் பெயர் விவேக்கிற்கு கொடுக்கக் கூடாது என்பதுதான். அப்பா பெயரை மகன் சேர்த்துப் போடுவதால் என்ன தவறு இருக்கிறது என்பதுதான் என்னுடைய கேள்வி.

இன்னும் உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் நான் சிவாஜியின் மகன் என்று சொல்வதில் எனக்கு பெருமை. இதை சிவாஜி ஒப்புக்கொண்டால் அது அவருக்கே பெருமை. அடுத்த தலைமுறையை அங்கீகரிக்கும் பெரும் தலைவர் ஆகிறார்.

சிவாஜியின் மகன் என்பதனால் அவருடைய சொத்தையா நான் அபகரிக்க போகிறேன்? சொத்தை விட எனக்கு அவர் நிறையவே திறமைகளை கொடுத்திருக்கிறார். கலை அறிவை கொடுத்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் தம்பி பிரபு என்னை அண்ணனாக ஏற்றுக் கொண்டது தான். இவ்வாறு அந்தப் பேட்டியில் கமல் கூறி இருப்பது பெரும் வைரலாகி வருகின்றது.