நாயகன் படத்துலயே கமல் செய்த புதுமை… யாராவது இதைக் கவனிச்சீங்களா?

By Sankar Velu

Published:

உலகநாயகன் கமல் – மணிரத்னம் காம்போவில் 38 ஆண்டுகளுக்கு முன் வந்து பிரமிப்பை ஏற்படுத்திய படம் நாயகன். இந்தப் படத்திற்கு எவ்வளவு பெருமை என்பதை யாருமே சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அந்தளவுக்கு அந்தக் காலகட்டத்தில் இந்தப் படத்தைப் பற்றி சிலாகித்து விமர்சிக்காதவர்களே இல்லை. நல்ல ஒரு ரசிகன் என்பவன் யாராக இருந்தாலும் கமல் நடித்த இந்த நாயகன் படத்தைப் பாராட்டாமல் இருக்கவே மாட்டான்.

thuglife
thuglife

படத்தில் ஒவ்வொரு காட்சியும் அந்தந்த வயதுக்கேற்ப கேரக்டர்களின் தோற்றம் மட்டும் மாறாமல் அதன் செயல்பாடுகளிலும் மாற்றத்தைக் கொண்டு வந்து இருப்பார். அது குரலிலும், நடை, உடை, பாவனையிலும் நன்றாகவே தெரியும்.

அந்த வகையில் இந்தப் படத்தில் கமல் நடிப்பில் ஒரு புதுமையைச் செய்துள்ளார். இதை யாரும் அவ்வளவாக கவனித்து இருக்க மாட்டார்கள்.

என்றாலும் இதைப் படித்து விட்டாவது ஆமா இல்ல… அப்பவே கமல் எவ்வளவு சிரத்தை எடுத்து கேரக்டர்களை செதுக்கியுள்ளார் என்பது தெரியவரும். அந்த வகையில் அதே உற்சாகத்துடன் கொஞ்சமும் குறையாமல் மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படமும் கமலுடைய கெட்டப், நடிப்பு என எல்லாமே மிரட்டலாக வந்துள்ளதாம். மணிரத்னத்துக்கு கமலின் நடிப்பு எல்லாம் ரொம்பவே பிடித்து விட்டதாம். இன்னொரு நாயகனை விரைவில் பார்க்கலாம்.

அது சரி. நாயகன் படத்தில் கமல் என்ன புதுமை செய்துள்ளார் என்று தானே கேட்கிறீர்கள். அவர் நாலு வகையான நடையை நடந்துள்ளார். இளயதில் ஒரு நடை. கொஞ்சம் வயதானதும் காலை அகற்றியபடி நடை. அப்புறம் அதை விட வயதானதும் காலை அகற்றியபடி மெதுவான நடை.

இன்னொரு வயதில் ரொம்ப பயங்கரமாக கையை எல்லாம் அகட்டியபடி வேகமா நடப்பாரு. இன்னும் கொஞ்சம் நல்லா கவனிச்சிப் பார்த்தீங்கன்னா பசங்கக் கூட துளசி மாடத்தை சுத்தி வரும்போது வேகமா ஓடுவாரு.

அதே துளசி மாடத்தை வயதானதும் சுற்றி வரும்போது பொண்ணை அடிக்கும்போது துளசி மாடத்தை சுற்றி வரும்போது நொண்டி நொண்டி ஓடுவாரு. அப்படிப்பட்ட ஒரு எக்ஸலெண்ட்டைக் காட்டியிருப்பாரு. அவர் ஒரு சினிமாட்டிக் லெஜண்ட். வேற லெவல் வெரைட்டியை சாதாரணமான நடையில காட்டியிருப்பாரு.