ஆரம்பித்த ஒரே வாரத்துல ஆஃப் ஆகிடுச்சே!.. ஆண்டவரின் தக் லைஃப் படத்துக்கு ஏற்பட்ட திடீர் பிரேக்?..

Published:

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னையில் தொடங்கியது. மேலும், மணிரத்னம் ஐந்து நாட்களில் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு, அடுத்த ஷெட்யூலை தொடங்க கமல்ஹாசனுக்காக காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான நாயகன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து 36 ஆண்டுகள் கழித்து தக் லைஃப் படம் மூலம் மணிரத்னத்துடன் கமல் மீண்டும் இணைந்துள்ளார். தக் லைஃப் படம் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருகிறது. இந்தியன் 2, கல்கி படங்களைத் தொடர்ந்து தக் லைஃப் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் கமல்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்:

ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் மற்றும் கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். மேலும், திரிஷா, ஜெயம் ரவி, அபிராமி, நாசர், துல்கர் சல்மான், கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். கமலின் விக்ரம் படத்தை மனதில் கொண்டு அவரின் அடுத்த படத்திற்க்கு மேலும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

இந்நிலையில் தக் லைஃப் படப்பிடிப்பு கடந்த வாரம் 24ம் தேதி சென்னையில் தொடங்கியது. அதில், கமல் மீசை தாடி இல்லாமல் மாஸான லுக்கில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைபடங்கள் வெளியாகியிருந்தன. மேலும், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி ஆகியோரும் ஷுட்டிங்கில் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தக் லைஃப் படப்பிடிப்பு தொடங்கிய ஐந்து நட்களிலேயே பிரேக் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தக் லைஃப் படத்துக்கு பிரேக்:

தற்போது கமல் இருக்கும் லுக்கில் ஃபிளாஷ்பேக் சீன் ஐந்து நட்களில் எடுத்ததாக தெரிவித்துள்ளனர். அடுத்து கமல் லுக் மாறி ரெடியாகும் வரை படப்பிடிப்பை நிறுத்தி வைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதைத் தொடர்ந்து தக் லைஃப் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே KH 237 படத்தின் ப்ரீ புரொடக்ஷனிலும் கமல் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தக் லைஃப் படத்தில் கமல் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரின் ரெட்ரோ லுக் செம்மையாக இருக்கும் என கூறப்படுகிறது. கமல் அடுத்த லுக்கில் தாடி மீசையுடன் ஒரு மாஸான கேங்ஸ்டராக மாறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்றும் கூறுகின்றனர். அதுவரை தக் லைஃப் படப்பிடிப்புக்கு பிரேக் விட்டுள்ளார் மணிரத்னம். பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக் லைஃப் கோலிவுட்டில் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் உங்களுக்காக...