பிக்பாஸ் – 7 நிகழ்ச்சிக்காக கமல் வாங்க போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published:

சின்னத்திரையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சி தான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக் பாஸ். தற்போது புதிதாக தொடங்க இருக்கும் பிக் பாஸ் சீசன் 7ல் கமலின் சம்பளம் தொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் இந்தியன் 2 திரைப்படம் என அடுத்தடுத்து பல படப்பிடிப்புகளில் கமிட் ஆகி வருகிறார். இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் சின்னத்திரையில் தொகுத்து வழங்கும் பிரபல நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.

மக்களிடையே சீரியலை விட நட்சத்திரங்களை கொண்டு விளையாட்டாக நடத்தப்படும் இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். விஜய் டிவி நடத்தும் இந்த நிகழ்ச்சியின் எல்லா சீசன்களும் நல்ல ஒரு ரேட்டிங்கை பெற்று முன்னிலை வகிக்கிறது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ள போகிறார்கள் என்ற விவரம், அந்த பிரபலத்தின் குண அம்சங்களை தெரிந்து கொள்வதிலும் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர். அதிலும் சில நடிகர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரபலமடைந்து வருவதும் வழக்கம் தான்.

இதுவரைக்கும் வெற்றியுடன் ஆறு சீசன்களை முடித்துள்ள விஜய் டிவி தற்போது பிக் பாஸ் சீசன் 7-ஐ வருகிற அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல லட்சம் வியூவர்ஸை தன் கைவசம் வைத்திருக்கும் விஜய் டிவி இந்த சீசனை 106 நாட்கள் நடத்தும்.

உலக சுற்றுப் பயணத்திற்கு தயாரான விஜய்! ஒரே அதிரடி தான்..

தற்பொழுது வெள்ளி திரையில் பிஸியாக இருக்கும் கமல் அவர்கள் வழக்கம் போல இந்த சீசனை தொகுத்து வழங்குவாரா என்ற கேள்விகளும் அடுத்தடுத்து முன் வைக்கப்படும் நிலையில் பிக் பாஸில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு சரியான தொகுப்பாளராக மட்டும் கமல் இல்லாமல் சரியான ஒரு நடுவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு யாராலும் இந்த இடத்தை நிரப்ப முடியாது என்பதால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு கமல் தான் சரியான நபர் என முடிவெடுத்த விஜய் டிவி அதிகப்படியான சம்பளத்தை கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. விஜய் டிவி கமல் அவர்களுக்கு இந்த சீசனுக்காக 150 கோடி சம்பளமாக வழங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...