கமல், ரஜினி படங்களில் முந்துவது எது? பிரபலம் லேட்டஸ்ட் தகவல்

நீண்ட காலத்திற்குப் பிறகு கமலும், ரஜினியும் இணைந்து படத்தில் நடிக்கப் போகிறார்கள். நீண்ட காலமாகவே ரசிகர்களுக்கு மத்தியில் இந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அது இப்போது அரங்கேறப் போகிறது என்றதும் குஷியோ குஷியாகி விட்டார்கள்.…

நீண்ட காலத்திற்குப் பிறகு கமலும், ரஜினியும் இணைந்து படத்தில் நடிக்கப் போகிறார்கள். நீண்ட காலமாகவே ரசிகர்களுக்கு மத்தியில் இந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அது இப்போது அரங்கேறப் போகிறது என்றதும் குஷியோ குஷியாகி விட்டார்கள். அதற்கான புரோமோ வந்ததும் இணையத்தைத் தெறிக்க விட்டது.

நெல்சன் இயக்கம், அனிருத் இசை, கமல், ரஜினி என இரு பெரிய லெஜண்ட்கள், இருவரில் யார் ஹீரோ, யார் வில்லன்? யாருக்கு ஜோடி? ஹீரோயின் யார் என்றெல்லாம் இணையத்தில் அலசப்பட்டு வருகின்றன. புரோமோ ரசிகர்கள் மத்தியில் எப்படி வரவேற்பு கிடைத்துள்ளது?

கமல், ரஜினியின் கெட்டப் எப்படி உள்ளது? நெல்சன் சாதிப்பாரா? யாருக்குமே கிடைக்காத அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதே… அதைத் தக்க வைப்பாரா என்றும் பலவாறாக கேள்விகள் எழுகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தின் கதை என்ன? டைட்டில் என்ன என்ற கேள்விகளுக்கு எல்லாம் காலம் தான் பதில் சொல்லும். அதுவரை ரசிகர்கள் பொறுத்திருக்க வேண்டும்.

அது இருக்கட்டும். கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கப் போவதாக செய்திகள் வந்ததே. அதற்குள் கமலும், ரஜினியும் இணைந்து நடிக்கப் போவதாகவும் அறிவிப்பு வருகிறதே? இதுல எதுதான் முதல்ல வரும்? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதற்கு பதில் என்னன்னு பிரபலம் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

கமல், ரஜினி இருவரும் இணைந்து நடிக்கும் படம் முதலில் ரிலீஸ் ஆகுமா? அல்லது கமல் தயாரிப்பில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் முதலில் ரிலீஸ் ஆகுமா என ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

கமல்ஹாசன் தயாரிப்பிலும், சிபிச்சக்கரவர்த்தியின் இயக்கத்திலும் ரஜினிகாந்த் நடிக்கும் படம்தான் முதலில் வெளியாகும். அதற்குப் பின்னால தான் கமல், ரஜினி இருவரும் இணைந்து நடிக்கின்ற படம் வெளியாகும் என்கிறார் சித்ரா லட்சுமணன்.