200 கோடி வசூல் சாதனை… கௌதம் மேனன் தட்டி விட்ட கமல் பட வாய்ப்பு… யாருக்கு கிடைத்தது தெரியுமா…?

By Bala Siva

Published:

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான தசாவதாரம் என்ற திரைப்படம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நவராத்திரி நடித்தது அதுவரை சாதனையாக இருந்த நிலையில் கமல்ஹாசன் அந்த சாதனையை முறியடித்து பத்து கேரக்டர்களில் நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை செய்தது.

இந்த படத்தின் கதையை கமல்ஹாசன் தான் எழுதினார். பத்து வேடங்கள், சயின்ஸ் மற்றும் கடவுள் கலந்த ஒரு கதை என்பதை முடிவு செய்தவர் முதலில் இந்த கதையை கௌதம் மேனனிடம் தான் கூறினார். அதை அவர் டெவலப் செய்து திரைக்கதை அமைத்து சுஜாதாவை வசனம் எழுத வைக்க வேண்டும் என்பதுதான் அவரது எண்ணமாக இருந்தது.

dasavatharam4

ரஜினி, கமல் பீல்டில் இருந்த போது அவுட்டாகாத நடிகர் சிவகுமார்… அப்புறம் பீல்டு அவுட்…. என்ன காரணம்னு தெரியுமா?

ஆனால் அப்போது வேறொரு படத்தில் கௌதம் மேனன் பிஸியாக இருந்ததால் அவர் தன்னால் இப்போது முடியாது என்று கூறியுள்ளார். அடுத்ததாக இந்த கதை ரவிக்குமாரிடம் சென்றது. அந்த சமயத்தில் கேஎஸ் ரவிக்குமார் அஜித்தின் வரலாறு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்ததால் அடுத்த படமாக கண்டிப்பாக இதை செய்துவிடலாம் என்று கமல்ஹாசனுக்கு உறுதியளித்தார். கமல்ஹாசன், கிரேசி மோகன், கேஎஸ் ரவிக்குமார், எழுத்தாளர் சுஜாதா ஆகிய நான்கு பேரும் கதை டிஸ்கஷன் செய்தனர்.

நான்கு பேரும் கொடுத்த ஐடியாக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் பிறகு திரைக்கதை உருவானது. கமல்ஹாசன் சயின்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளை கூற, கேஎஸ் ரவிக்குமார் ஆன்மீக சம்பந்தப்பட்ட காட்சிகளைக் கூற, சுஜாதா அதை இரண்டையும் மிக அழகாக இணைக்கும் காட்சிகளை தெரிவித்தார். கிரேசி மோகன் நகைச்சுவை பாகங்களை பார்த்துக்கொண்டார். மொத்தத்தில் இந்த படத்தின் திரைக்கதை வசனம் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கியது.

dasavatharam3 1

கோடிக்கணக்கில் லாபம் பெற்ற அமிதாப் படம்.. ரீமேக் செய்து தோல்வி அடைந்த ரஜினிகாந்த்..!

முதலில் இந்த படத்தை 20 கோடியில் எடுக்கத்தான் பட்ஜெட் போடப்பட்டது. தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்தின் பட்ஜெட் ஏற ஏற கவலைப்படவே இல்லை. இந்த படத்தை முடித்த போது 60 கோடி ரூபாய் பட்ஜெட் ஆனது. 15 வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தின் பட்ஜெட் 60 கோடி என்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது.

இறுதியில் சுனாமி காட்சிக்காக ஒரு கோடி ரூபாய் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நிறுவனம் கேட்டதாகவும், அந்த காட்சியை மாற்றலாம் என்று கமல் கூறியதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சுனாமி காட்சி இல்லாமல் இந்த படம் நிறைவு பெறாது என்பதால் கூடுதலாக ஒரு கோடி ரூபாய் செலவு செய்ய முன்வந்தார். ஆனால் அவருக்கு கூடுதல் சுமை கொடுக்க விரும்பாத கமல் தன் சம்பளத்தில் குறைத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

dasavatharam1 1

இருப்பினும் ஒரு சில காட்சிகள் பட்ஜெட் காரணமாக தான் நினைத்தபடி எடுக்க முடியவில்லை என்பதை கமல் ஒப்புக்கொண்டார். மெரிக்க மேக்கப் கலைஞர் தான் இந்த படத்தில் கமல்ஹாசனின் 10 கேரக்டரை உருவாக்கினார். ஒவ்வொரு கேரக்டரின் மேக்கப் டெஸ்ட் எடுத்து அதில் இருக்கும் குறை நிறைகளை கமல் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் கூறி, அதன்பின் பத்து கேரக்டர்கள் உறுதி செய்யப்பட்டன.

இந்த படத்தில் ரங்கராஜன் ராமானுஜ நம்பி, கோவிந்தராஜன், பல்ராம் நாயுடு, அவதார் சிங், ஜார்ஜ் புஷ், கிரிஸ், சிங்கன் நரஹசி, கிருஷ்ணவேணி, வின்சென்ட் பூவராகன் மற்றும் கலிபா முக்தார் என்ற பத்து கேரக்டர்களில் கமல் நடித்தார். நாயகியாக அசின் நடிக்க, இன்னொரு நாயகியாக ஜெயப்பிரதா நடித்தார். மல்லிகா ஷெராவத் வில்லன் கேரக்டரிலும், ரேகா, கேஆர் விஜயா, நெப்போலியன், ரகுராம், நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களிலும் நடித்தனர். இயக்குனர் பி வாசு மற்றும் சந்தான பாரதி ஆகிய இருவருமே இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

dasavatharam 1

நேருக்கு நேராக மோதிக்கொண்ட ரஜினி, கமல் படங்கள்! வெற்றி யாரு பக்கம்!

இந்த படத்திற்கு முழுக்க முழுக்க வித்தியாசமான இசை இருக்க வேண்டும் என்பதற்காக ஏஆர் ரகுமான், இளையராஜா ஆகியோர்களை பயன்படுத்தாமல் ஹிமேஷ் ரேஷ்மையா என்பவரை கமல்ஹாசன் பயன்படுத்தினார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி இந்த படம்  வெளியானது. 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று  200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.